தொடர் மரணங்கள்- ஊராட்சி செயலாளர்களின் தொடரும் சோகம்

சேலம் மாவட்டம்

ஏற்காடு ஒன்றியம்,ஏற்காடு ஊராட்சியின் ஊராட்சி செயலர் அன்பு சகோதரர் சிவகுமார் அவர்கள் பணியாற்றி வந்தார்.

.அம்மாவட்டத்தில் ஏற்காடு மலைப்பகுதியில் 2000 சதுர அடிகளுக்கு மேல் உயர் அலுவலர் உத்தரவின்றி வீட்டு வரி விதிப்பு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில்  ஏற்காடு ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரூபி என்பவர் 3000 சதுரஅடி உள்ள ஒரு கட்டிடத்திற்கு கட்டிட வரிவிதிப்பு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததுடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டுள்ளார்.. அதே மன உளைச்சலில் இன்று மாவட்ட அளவில் நடைபெற்ற வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் கலந்து கொண்ட  சிவகுமார்  திடீரென்று மயங்கி விழுந்து மரணமடைந்தார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்தை தருகிறது!*

*கள்ளக்குறிச்சி நிகழ்வு சோகம் இன்னும் சற்றும் குறையாத நிலையில் இப்படி ஒரு செய்தி பேரிடியாக வந்திருப்பது மிகுந்த வேதனை தருகிறது!*

*அன்னாரின் இறப்பிற்கு மாநில அமைப்பின் சார்பாக கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குவதுடன் சற்று நேரத்தில் ஒன்றிய மாவட்ட மையங்களுடன் கலந்து பேசி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் ஊராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க அறிவிப்பு செய்யப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்*

Also Read  ஏழைகளுக்கு எப்போதும் உணவளிக்கும் முனியாண்டி

கண்ணீருடன்.                                  மாநில மையம்*

தொடரும் இதுபோன்ற நிகழ்விற்கு இறுதியான நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் அதிமுக்கிய கடமை ஆகும்.