ஊராட்சி செயலாளர் மரணம் – மாநில மையம் போராட்ட அறிவிப்பு

ஜான்போஸ்கோ பிரகாஷ்

போராட்ட அறிவிப்பு

*கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி ஒன்றியம் சிறுவங்கூர் ஊராட்சி செயலர் அன்பு சகோதரர் திரு.ஜெயவேல் அவர்கள் இன்று மன உளைச்சல் காரணமாக ஏரிக்கரை செல்லியம்மன் கோவில் அரச மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியூட்டுகிறது..மிகக் குறைந்த வயதில் இந்த நிலைக்கு நிர்வாகம் சகோதரரை தள்ளி இருப்பது மிக கண்டிக்கத்தக்கது..!*

*சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் அலுவலக ஆவணங்களை ஊராட்சி செயலர் ஜெயவேல் அவர்களிடம் வழங்காமல் தானே வரவு செலவுகளை தான்தோன்றித்தனமாக செய்து வந்துள்ளார்.அது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் வசம் பலமுறை புகார் தெரிவித்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் கையறு நிலையில் அதை வேடிக்கை பார்த்ததும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..மேலும் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் இவர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்!*

*நிர்வாகத்தில் ஒரு ஊராட்சி செயலருக்குரிய மரியாதையை வழங்காமல் அலுவலக ஆவணங்களை வழங்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது கொலை வழக்கு பதிந்து அவருடைய தலைவர் பதவியை பறிக்கும் வகையில் நாளை சனிக்கிழமை காலை 11 மணியளவில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் TNPSA மாநில பொருளாளர் சேலம்.K.மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Also Read  ஊராட்சி ஒன்றியங்களும்-பணிகளும்

*உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் TNPSA மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் எதிர்வரும் புதன்கிழமை(01.03.2023)முதல் மாவட்டம் முழுவதும் விடுப்பு எடுத்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என இதன்வழி அறிவிக்கப்படுகிறது!*

இவண்

*தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்*
*மாநில மையம்*