சேலம் மாவட்டம்
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராக பணிபுரிந்துவந்த திரு.சிவக்குமாரின் மரணத்திர்க்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை வழியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் வைத்த கோரிக்கைகள்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக
பணிபுரிந்து வந்தவர் A.சிவக்குமார் ஆவார். இவ்வூராட்சி மன்றத்தின் ஊராட்சி தலைவர் திருமதி
சிவசக்தி ஆவார். இவர் இவ்வூராட்சியின் நிர்வாகத்தை பார்க்காமல் புகழ்பெற்ற ஏற்காடு
மான்போர்ட் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். அதனால் இவரின் கணவர் முழுமையாக
ஊராட்சி நிர்வாகத்தை அதிகார துஸ்பிரயோகம் செய்து பார்த்துவந்துள்ளார்.
சம்பவம் நடந்த
25.02.2023 அன்று எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஊராட்சி தலைவியின் கணவர் ரூபி என்கிற
ரவிச்சந்திரன் முறைகேடான வீட்டுவரி விதித்திட வற்புறுத்தியுள்ளார்.
அதர்க்கு மாவட்ட
ஆட்சியரின் அறிவுரைப்படி மலைவாழ் பகுதியில் 2000 சதுர அடிக்குமேல் வீட்டுவரி ஊராட்சி
நிர்வாகத்தால் விதிக்க முடியாது என்பது குறித்து தலைவியின் கணவரிடம் ஊராட்சி செயலாளர்
சிவக்குமார் எடுத்துகூறியும் சிறிதும் கேட்காதவர் வரிவிதித்தே தீரவேண்டும் என மிரட்டி உள்ளார்.
மிரட்டலில் அதிர்ச்சி அடைந்த சிவகுமார் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடன் ஏற்காடு அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கேயே உயிர்பிரிந்துள்ளது.
1.மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட ஊராட்சி தலைவரின் கணவரின் மீது கொலைவழக்கு பதிவு
செய்து கைது செய்யவேண்டும்
2.ஏற்காடு ஊராட்சி தலைவி தனது ஊராட்சி நிர்வாக பணியை தான் பார்க்காமல்தனது கணவர்
ரவிச்சந்திரனை ஈடுபடுத்தி நிர்வாகித்த காரணத்திர்க்கு ஊராட்சி தலைவரின் பதவியை
பறிக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல…அரசு சார்பு ஆலோசனை கூட்டங்களில் ஊராட்சி தலைவர் உட்பட அனைத்து துறை அதிகாரிகாளும் ஒருசேர கலந்து கொள்ளவேண்டும்.
சனி,ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும்.
மாலை நேரம் மற்றும் மாலை நேரத்து காணொளி கூட்டத்தில் பங்கேற்கும் பெண் ஊழியர்களின் சங்கடங்களை கருத்தில் கொண்டு, மாலை நேரத்து ஆலோசனை கூட்டங்களை அறவே நிறுத்த வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைகளை வழியுறுத்தி, இனி ஒரு விதிசெய்வோம் என போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர் ஊராட்சி செயலாளர்கள்.
வெல்லட்டும் இவர்கள் போராட்டம் என நமது இணைய செய்தி தளத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.