ஊராட்சித்துறை ஊழியர்களின் ஊதியம் – அரசிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வேண்டுகோள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் கூறிப்பிட்டுள்ளதாவது

தமிழகத்தில் உள்ள 12524 கிராம ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டிய ஏப்ரல் மற்றும் மே மாத மாநில நிதிக்குழு மானியம் விடுவிக்க வேண்டும்.

12524 ஊராட்சிகளில் சொந்த நிதி ஆதாரம் கொண்டு செயல்பட்டு வரும் ஊராட்சிகள் சுமார் முவாயிரம் ஊராட்சிகள் மட்டுமே மீதி உள்ள 9000 ஊராட்சிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்ற மாநில நிதிக்குழு மானியத்தை வைத்தே ஊராட்சி நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது .

தற்போது கொரோனா வைரஸ் தடுப்புநடவடிக்கைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினந்தோறும் ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளித்தல் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் வெளியூர்களில் இருந்து வந்தவர்களை தனிமைப் படுத்துதல் . மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை கிராம ஊராட்சிகள் சிறப்பாக செய்து வருகிறது .

மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுப்பது போன்றபணிகளையும் செய்துவருகிறது.

அதே போல் ஊராட்சி பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியமும் மாநில நிதிக்குழு மானியம் வரவாக்கபடாததால் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இதுபோன்ற நிலையில் அடிப்படை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் வழங்குவதில் ஏற்படும் இடர்பாடுகளை களைய விரைந்து மாநில நிதிக்குழு மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.

இவ்வாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி குறிபிட்டுள்ளார்.

Also Read  உள்ளாட்சியில் பினாமி அதிகாரம்-அரசு நடவடிக்கை