ஜெய் பைசா… ஜெய் ரிஷபத்-புதிய கொள்கையால் விவசாயத்தை அழிக்க துடிக்கும் அதிகாரவர்க்கம்

ஜெய் ஜவான்.. ஜெய் கிஷான்” என்பது நமது சுதந்திர இந்தியாவின் தாரக மந்திரம்…

அதாவது ‘வாழ்க ராணுவம்”… “வாழ்க விவசாயம்..” என்பதே..!

அந்த மந்திரத்தை மாற்றியமைக்க பணம் படைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிந்து கொண்டு கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.

அதில் எத்தனையோ கசமுசா உண்டு..

இப்போது சுதந்திர இந்தியாவை சுரண்டுபவர்களின்.. தாரக மந்திரம்.!

“ஜெய் பைசா”… “ஜெய் ரிஷபத். அதாவது “வாழ்க பணம்”… “வாழ்க ஊழல் லஞ்சம்” என்பதே…

கொரோனாவின் கோர யுத்தம் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்கையிலேயே..
சந்தடியில்லாமல் சிவகங்கைச் சீமையில் ஒரு கிராமத்தில் விவசாயத்தை வாரி சுருட்டி வாயில் போட நினைத்துக் கொண்டிருக்கிறது ஒரு நிறுவனம்…

அது நமது தமிழகத்தின் நிறுவனம் அல்ல..

மரம் வளர்ப்போம்…. அதில் மழை வளம் காப்போம்… என்ற நமது கிராம பஞ்சாயத்து கொள்கையை குழி தோண்டிப் புதைத்தது அந்த நிறுவனம்…!

ஆம் ..டிஜிட்டல் இந்தியாவின் கொள்கையை நாங்கள் தான் தூக்கிப் பிடிக்கிறோம் என்ற மமதையில் வேப்பங்குளம் கிராமத்தில்.
சுமார் 400 ஏக்கர் பகுதிகளில் இருக்கின்ற மரம் செடி கொடிகளை வெட்டி வீழ்த்தி மின்சார தகடுகள் சோலார் தகடுகளை பதிக்க தயாராகி விட்டது அந்த நிறுவனம்.

Also Read  ஊராட்சி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு....அரசுக்கு வேண்டுகோள்..

இதுகுறித்து அந்த வேப்பங்குளம் கிராம ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் துணைத்தலைவர்,  ஊராட்சி தலைவி என்று அவருடைய கருத்துக்களை நாம் கேட்டபோது.

அனைவரும் கூறிய ஒட்டுமொத்த பதில் எங்களுக்கு தேவை விவசாயம். எங்களின் அடிப்படை உரிமை விவசாயம்.
இதை மாற்றியமைக்க எந்த நிறுவனமும் வந்தால் அதை எதிர்ப்போம்.
என்று ஒட்டுமொத்தமாக நம்மிடம் கூறினார்கள்..

ஆனால் இந்தப் பிரச்சினையில்…

பஞ்சாயத்து ஊராட்சி தேர்தல் வருவதற்கு முன்னே இந்தத் திட்டங்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு விட்டது என்பதே….!
அதையும் மாற்றியமைக்க வேண்டும் என்றால்.

கிராம பஞ்சாயத்து ஒன்று கூடி தீர்மானம் செய்தால் மட்டுமே இந்த நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் விவசாய விவகார பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்..

குறிப்பிட்டத்தக்க உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் இந்த இந்த பிரச்சினையை இழுத்து மூடிவிட முடியும்.அந்த வேலையை செய்ய நிறுவனம் பல வழிகளை கையாளும்.

அப்படிப்பட்ட துரோகம் செய்பவர்கள் இந்த விவசாய மண்ணிற்கு செய்யும் மாபெரும் துரோகம்.
அது மன்னிக்க முடியாத மகா பாதகம் ஆகும்.
இந்த வேப்பங்குளம் மண்ணிற்கு செய்யும் மாபெரும் துரோகம் என்பது சரித்திர உண்மையாகி விடும்..
என்பது மறைக்க முடியாத உண்மையாகும்…!

Also Read  ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் இஆப நியமனம்

இந்த பிரச்சனையை கேள்விப்பட்டு தமிழகத்தில் உள்ள, ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து செய்தி ஊடகங்களும் வேப்பங்குளத்தை  உற்று கவனித்துக் கொண்டு இருக்கிறது…

வேப்பங்குளத்தில் இருக்கும் ஒரு சிலர் அந்த நிறுவனத்திற்கு கைக்கூலியாக செயல் படுகிறார்கள் என்ற செய்தியும் நமக்கு கிடைத்துள்ளது….

அவர்கள் யார் என்பதை கூடிய விரைவில் வெளிச்சம் போட்டு காட்ட நமது “tnபஞ்சாயத்து செய்திகள்” தயாராக உள்ளது..

நம்முடைய நோக்கம் எல்லாம் இயற்கை இயற்கை சார்ந்த வாழ்வியல் நிலத்தடி நீர் மேலாண்மை என்பது மட்டுமே என்பது உறுதியாக பதிவு செய்கிறோம்….

இந்த பிரச்சினையில் இருக்கும் பெரிய நகைச்சுவை என்னவென்றால்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பது அந்த ஊர் மக்களுக்கு தெரியாது..

அடிமட்ட ஊழியர்களுக்கும், அடிமட்ட அரசு அதிகாரிகளுக்கும் தெரியாது. இது ஒரு மோடி மஸ்தான் வேலையாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை….

இறுதியாக நமக்கு கிடைத்த தகவல்…விரைவில் ஊராட்சி சார்பாக சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற போகிறார்களாம்.எந்த தடை வந்தாலும் ஒற்றுமையால் அனைத்தையும் வென்று காட்டவேண்டும்.