தலைவர்-செயலர்
கிராம ஊராட்சியே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படை.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி தேர்தல்(9மாவட்டங்கள் நீங்கலாக) நடந்து முடிந்துள்ளது.
பதவி ஏற்றவர்களில் எழுபது சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு பஞ்சாயத்துராஜ் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்படும்.
அதுவரையும்,பதவி காலத்தின் இறுதிவரையும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் ஊராட்சி செயலர்கள் ஆவர்
இணைந்தே இருக்கவேண்டிய இரட்டை தண்டவாளங்கள்
நமது இந்த குறுகிய கால பயணத்தில் சில பஞ்சாயத்தில் தலைவருக்கும்,செயலருக்கும் ஒத்து போகமுடியாத நிலையை கண்டோம்.
இரண்டு பேரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பஞ்சாயத்தில் மக்கள் பணி சிறப்பாக நடைபெறும்.
இதுபோன்று பிரச்சனை உள்ள பஞ்சாயத்து நிலைமையை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத் தலைவர் ஜான்போஸ் பிரகாஷ் அவர்களிடம் எடுத்துக் ௯றி, சுமூக தீர்வுகாணும் முழு முயற்சியை நமது இணையம் எடுக்கும்.
அந்த முயற்சிக்கு மேலும் துணையாக உள்ளாட்சி உயர் அதிகாரிகளிடமும் செய்தி கொண்டு சேர்க்கும் பணியையும் நாம் செய்வோம்.
மக்கள் பணியில் உள்ளாட்சி பிரதிநிகளோடு உறுதியான பயணத்தை என்றென்றும் செய்வோம்.