IP க்கு EB யா? மாற்றமா…கூடுதல்துறையா…

செந்தில்பாலாஜி

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் பணம் பெற்ற வழக்கு நீதி மன்றத்திற்கு வந்தது.

வழக்கு தொடுத்தவர்கள் உடன் சமாதானம் செய்து பணத்தை திருப்பி கொடுத்தனர். அதனை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து நடத்தலாம் என உச்சநீதிமன்ற உத்தரவு விட்டது.

அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளது.

அமைச்சர் பதவி

கைது செய்து வழக்கு நீதி மன்றத்திற்கு சென்றுவிட்டால் அமைச்சர் பதவியில் செந்தில்பாலாஜி விலக்கி வைக்கப்படுவார் என்றார் மூத்த பத்திரிகையாளர்.

அப்படி விடுவிக்கப்பட்டால், உடனடியாக புதிய அமைச்சர் நியமிக்க வாய்ப்பு இல்லை. அவர் வகித்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு கூடுதலாக கொடுக்க வாய்ப்பு உள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி வேண்டா வெறுப்பாகவே ஊரகத்துறை அமைச்சராக தொடர்வதாக கூறுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அவர் மின்சாரத்துறை அமைச்சராக மாறுவாரா அல்லது மதுவிலக்கா…இல்லை, ஊரக வளர்ச்சித்துறையோடு மின்சாரத்துறை அல்லது மதுவிலக்கு கூடுதலாக கிடைக்கும் என்ற செய்தி பத்திரிகையாளர்களிடம் உலா வருகிறது.

ஊரக வளர்ச்சி துறை என்பது மக்களிடம் நேரடி தொடர்பு உள்ள துறை. உதயநிதிதிக்கு கூடுதலாக ஊரக வளர்ச்சி துறை தரப்படலாம் என்ற செய்தியும் வருகிறது. சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பாக ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்துவதால் இதுவே சரியாக இருக்கும் என்றார் ஆளும்கட்சிக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர்.

Also Read  தலைவர் பதவியை ராஜினாமா செய்வோம் - ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு