தலைவர் பதவியை ராஜினாமா செய்வோம் – ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு

முதல்வருக்கு கடிதம்

வணக்கம். தமிழ்நாடு பஞ்சாயத்ராஜ் சட்டம் 1994 முன்னால்முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அமல்படுத்தப்பட்டு பஞ்சாயத்ராஜ் சட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

கடந்த 2016 முதல் 2019வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் ஸ்பெஷல் ஆபிசர் மூலமாக ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்த
நிலையில் கடந்த 2020 ஜனவரியில் புதிய ஊராட்சி நிர்வாகத்தை உரிய
வழிமுறையின்படி ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் ஒப்படைக்காமல் ஸ்பெஷல் ஆபிசர் காலங்களில் செயல்பட்டதை போல் அரசியல்
பிரமுகர்கள் இன்று வரை துறை சார்ந்த அதிகாரிகளை கையில்
வைத்துக்கொண்டு பஞ்சாயத்ராஜ் சட்டம் நீர்த்து போகும் வகையில் ஊராட்சி
மன்றத்தலைவர்களை தள்ளுவதும் ஊராட்சிமன்றத்தலைவர்கள் அடிப்படை உரிமைகளை மறுப்பதும் ஏற்புடையது அல்ல.

கீழ்காணும் வகையில் பஞ்சாயத் ராஜ் சட்டம் புறக்கணிக்கப்படுகிறது.
1) மாநில அரசு பங்கு:)பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசி தேவைகளை நிறைவேற்ற
மாநில அரசு வருவாயில் மாநில நிதிக்குழு மானியம் கிராம ஊராட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது மாநில அரசு வழங்கும் மாநில
நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சிகளின் சொந்த வருவாய் ஊராட்சி
பொது நிதியாகும். இந்த நிதியில் பொதுமக்களின் அடிப்படை
அத்தியாவசிய தேவைகளான மின்சாரம் குடிநீர் சுகாதாரம் போன்ற
பணிகளை நிறைவு செய்ய வேண்டும். தெரு விளக்கு உதிரி பாகங்கள் –
குடிநீர் பைப் மற்றும் ஊதிரி பாகங்கள் மின் மோட்டார் பழுது நீக்குதல்
சுகாதார சாதனங்கள் – ஊராட்சி பணியாளர்கள் ஊதியம்
நிர்வாக செலவினங்கள் மேற்கொள்ள வேண்டும். நிதி நிலைக்கு, ஏற்றவாறு
எது முக்கியமோ அதனை தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
அலுவலக
ஆ) ஆனால், தெருவிளக்கு உதிரி பாகங்கள், குடிநீர் பைப் மற்றும் உதிரி
பாகங்கள், சுகாதார பணிகளுக்கான குப்பைவண்டி முதல் துடப்பம்,
பிளிசிங் பவுடர் வரை மாவட்ட – ஒன்றிய துறை சார்ந்த அதிகாரியே
கொள்முதல் செய்து ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்தும்,
உரிமைகளையும், தீர்மானங்களையும் கேட்டு நிர்பந்தித்து பெற்று
கொள்வது ஊராட்சி மன்றத் தலைவர்களின் அடிப்படை உரிமைகள்
மறுக்கப்படுவதோடு, பஞ்சாயத்ராஜ் சட்டம் நிராகரிக்கப்படுவதும்
ஏற்புடையது அல்ல.

மத்திய மாநில அரசு திட்டங்களில் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதி மத்திய மாநில
அரசு திட்ட நிதிகள் எதுவானாலும் கிராம சபா மற்றும் ஊராட்சி
தீர்மானங்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பணிகளை தேர்வு,
செய்ய வேண்டும் என்று பஞ்சாயத்ராஜ் சட்டம் சொல்கிறது, ஆனால் தற்போது தமிழ் நாட்டில் அரசு அதிகாரிகளே
பணிகளை தேர்வு செய்து விட்டு நாங்கள் தேர்வு செய்த பணிகளுக்கு
தீர்மானங்கள் கேட்டு தலைவர்களை நிர்பந்தம் செய்து தீர்மானங்கள்
வாங்குவதும் கிராம சபை மற்றும் ஊராட்சி தீர்மானங்களை சுயமாக
நிறைவேற்றவிடாமல் அதிகாரிகள் நிர்பந்தித்து கேட்டு வாங்குவது பொது
மக்களின் அடிப்படை உரிமைகள் இங்கே மறுக்கப்படுவது ஏற்புடையது
அல்ல.

2. ஊராட்சி மன்றத் தலைவருக்கு இரண்டு பதவிகள் ஒன்று ஊராட்சியின்
செயல் அலுவலர், இரண்டு ஊராட்சி மன்றத்தலைவர் இந்த இரண்டு
பதவிகளுக்கான பொறுப்பு பஞ்சாயத்ராஜ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள
ஊராட்சிகளின் வரவு-செலவு 31 பதிவேடுகளை பராமரிப்பது ஊராட்சி
செயலர் உள்பட பணியாளர்களை நிதி-மற்றும் தேவைக்கேற்றவாறு பணி
அமர்த்துவது ஊதியம் வழங்குவது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை
எடுப்பது, (பணி இடை நீக்கம் – பணி நிரந்தர நீக்கம்) உள்பட இங்கே
பணியாளர்களை யாரையும் வேலைவாங்க முடியவில்லை இன்றைக்கு
தமிழ்நாட்டில் ஊராட்சி செயலர்கள் தலைவர் உத்தரவுக்கு கீழ்படிவது
இல்லை. கேட்டால் தலைவருக்கு அதிகாரம் இல்லை B.D.O. தான்
அதிகாரி அவர்கள் சொல்படித்தான் நடப்போம் என்று ஊராட்சி
நிர்வாகத்துக்கு எதிர்மறையாக பெரும்பான்மை ஊராட்சிகளில் நடைபெற்று
வருகிறது. B.D.O. வை கேட்டால் சரியான பதில் இல்லை ஏன் என்றால்
ஊராட்சி செயலாளர் B.D.O. இருவரும் ஒரே சங்கத்தில் இருப்பதினால்
அவர்களுக்கு அவர் சப்போர்ட், ஒன்றிய அலுவலகத்தில் நடக்கும்
அலுவலக கூட்டங்களுக்கு தலைவர் இடம் அனுமதி பெற்று ஊராட்சி
செயலர்களை அழைப்பது இல்லை.

நேரடியாக ஊராட்சி செயலர்களை அழைப்பது ஊராட்சி செயலருக்கு B.D.O உத்தரவு போடுவது பஞ்சாயத்ராஜ் சட்டத்திற்கு எதிரானது, ஊராட்சி செயலர்களை அழைத்து B.D.O கூட்டம் நடத்த உத்தரவு போட எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது? இது ஊராட்சி மன்றத் தைைலவர்கள் அடிப்படை உரிமைகள் மறுப்படுகிறது அல்லவா? B.D.O விடம், கேள்வி கேட்டால் உன் மீது 203, 205ன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு பதவியை விட்டு நீக்கி விடுவேன் என்று சில ஊராட்சிகளில் தலைவர்கள் மிரட்டப்படுகிறார்கள். சில இடங்களில் 203 205ன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

Also Read  கெங்காபுரம் ஊராட்சி - விழுப்புரம் மாவட்டம்

இது மக்களால் ஜனநாயக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர்களை அச்சுறுத்தும், செயல் அல்லவா? ஊராட்சி மன்றத்தலைவர்கள் அரசு அதிகாரிகளால் நியமனம் செய்யப்பட்டவர்களா? அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் 29 அதிகாரங்கள் வழங்கப்பட்டு கிராம சுயராஜ்யம் என்று அழைக்கப்படும் ஊராட்சி நிர்வாகத்தை அதிகாரிகளால், சீர்குலைப்பதும், PFMS-ல் மூன்றாவது கையொப்பம் SNA-Digital signature card -மூலம் ஊராட்சி செயலருக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது ஏற்புடையதல்ல.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் முரணானது இது ஏற்புடையது அல்ல, அடிப்படை உரிமைகளுக்கு ஊராட்சிகளில் 50% பெண் தலைவர்கள் மற்றும் பட்டியல் இன தலைவர்கள் இடம் பெற்று உள்ள நிலையில், உள்ளுர் போட்டியால் எதிரிகளின் தூண்டுதலால் துணைத்தலைவர், ஊராட்சி செயலாளர் போன்றோர்கள். ஊராட்சி நிர்வாகத்துக்கு, ஒத்துழைப்பு நல்குவது இல்லை, மக்களின் தேவைகள் 100% பூர்த்தியாக வேண்டும் என்ற நோக்கத்தில் துணைத்தலைவர்

ஒத்துழைப்பு இல்லை என்றால், ஒரு வார்டு உறுப்பினரை தீர்மானத்தின் அடிப்படையில் இரண்டாவது கையொப்பம் இட அல்லது, தீர்மானம் நிறைவேற்ற இயலவில்லை என்றால் மக்களின் நலன் கருதி ஆறுமாதம் தலைவர் தன்னிச்சையாக செயல்படவும். ஆறு மாதத்தில் நிலைமை சரியாகவில்லை என்றால், மீண்டும் மீண்டும் ஆறுமாத காலம் நீடித்து வழங்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் பஞ்சயாத்துராஜ் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் எத்தனையோ ஊராட்சிகளில் துணைத்தலைவர் ஊராட்சி செயலர் ஒத்துழைப்பு இல்லாமல் முடங்கிய நிலையில் உள்ளது. அப்படிப்பட்ட ஊராட்சிகளில் B.D.O அல்லது Deputy B.D.O அதிகாரத்தை கையில் எடுத்து ஊராட்சி வரவு செலவு பார்த்து வருகிறார்கள். ஏன் தலைவருக்கு தனி அதிகாரம் வழங்குவதில்லை? இச்செயல் பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு முரணானது.

Also Read  துளார் ஊராட்சி - அரியலூர் மாவட்டம்

பாதுகாப்பு இல்லை

அதிகாரிகளாளும் அரசியல்வாதிகளாலும்,பெண் தலைவர்களுக்கும் பட்டியல் இன தலைவர்களுக்கும் போதிய மிரட்டப்படுகிறார்கள். துணைத்தலைவர் ஒத்துழைப்பு இல்லாத ஊராட்சிகளில் தலைவருக்கு தனி அதிகாரம் வழங்கி ஊராட்சி மக்களின் அடிப்படை அத்தியாவசிய பணிகள் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அரசு அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவது ஊராட்சி தலைவரின் அடிப்படை உரிமையை மீறிய செயல் ஏற்புடையது அல்ல.

டெண்டர் முறையில் ஊராட்சிகளுக்குண்டான பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திலேயே டெண்டர் நடத்த வேண்டும். அதற்குண்டான கணினி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாறாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் டெண்டர் வைப்பது ஏற்புடையது அல்ல.

 

SC/ST குக்கிராமங்களுக்கு பணிகளை அரசு நிதியின் (PMGAY) வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்கள் டெண்டர் வைப்பதை ரத்து செய்து அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களே டெண்டர் நடத்த வேண்டும்.

நிதி நிலையில் பின்தங்கி உள்ள ஊராட்சிகளுக்கு நிதி ஆதாரம் பஞ்சாயத்துகளிலிருந்து நிதி மாற்றம் செய்யும் பழைய உள்ள நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சொல்லப்பட்ட அனைத்து அதிகாரங்களில் இருந்தும், நீக்கும் வகையில் மத்திய அரசு MGNREGA திட்டம் முதல் பணித்தளப் பொறுப்பளர் நியமனம் மற்றும் மாட்டு கொட்டகை வழங்கும் திட்டம் வரை மத்திய மாநில அரசு திட்டங்கள் அனைத்திலும் ஊராட்சி நிர்வாகம் புறக்கணிக்கப்படுகிறது.. கிராம சபா மற்றும் ஊராட்சி தீர்மானங்கள் கூட ஊராட்சியில் சுயமாக நிறைவேற்ற முடியவில்லை. அதிகாரிகள் அதிகாரிகள் சொல்லும் தீர்மாங்களைத்தான் வைத்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை. இது மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது,

ஊராட்சிகளில் ஒப்படைக்கபட்ட இடங்களில் வீட்டுமனை நத்தம் புறம்போக்கு ஊராட்சிகளுக்கு பாத்தியப்பட்டது. வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றால் ஊராட்சி தீர்மானம் அடிப்படையில்தான் பட்டா வழங்கவேண்டும். ஆனால் வருவாய் துறை ஊராட்சி தீர்மானம் இல்லமாலேயே பட்டா வழங்கப்படுகிறது.

ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஊராட்சி மன்றதலைவர் வழங்கலாம் என்று அரசு ஆணை உள்ளது. ஏன் இது வரை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை?

தமிழ்நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் முழுமையாக மறுக்கப்பட்டு தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் தயவு கூர்ந்து பஞ்சாயத்துராஜ் சட்டம் முழுமையடைய நடவடிக்கை எடுத்து தங்களின் திராவிட மாடல் ஆட்சி சட்டத்தின் ஆட்சிதான் என்பதை நிலை நாட்டும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தாங்கள் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எனது பதவியையும், எனது வார்டு உறுப்பினர்கள் பதவியையும் கூண்டோடு ராஜினாமா செய்யத் தயார் நிலையில் உள்ளோம் என்பதை தங்களுக்கு இதன் மூலம் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படி ஒரு கடிதத்தை ஊராட்சி தலைவர்கள் தனித்தனியாக முதல்வருக்கு அனுப்பி வருவதாக தெரிகிறது. மாநில சுயாட்சி பேசும் திமுக அரசு ஊராட்சிகளுக்கு தன்னாட்சி தருமா?