மத்திய அரசு நிறுவனம்
PMBJK- Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendra. ப்ரதான் மந்திரி பாரதிய ஜனசுத்தி கேந்ரா என்ற இந்திய அரசுத்துறையின் இயங்குகிறது.
BPPI – Bureau of Pharma PSUs of India, பியூரோ ஆஃப் பார்மா PSUs ஆப் இந்தியா என்ற நிறுவனம் ஜெனரிக் மருந்தை கொள்முதல் செய்து விநியோகம் செய்கிறது.
இணையத்தளத்திலே விண்ணப்பம் செய்யலாம். இணைய முகவரி http://janaushadhi.gov.in/online_registration.aspx
- தனிநபர்,சொசைட்டி,அறக்கட்டளை மூலமாக நடத்தலாம்.
- ஆதார்,பான் கார்டு கட்டாயம்.
- குறைந்த பட்சம் 120 சதுர அடி இடம்.
- 20 சதவீதம் விற்பனையில் லாபம்.
- ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவேற்றலாம்.
- மத்திய அரசு தரும் மென்பொருளில் மட்டுமே பில் போடவேண்டும்..
இன்னும் பல்வேறு நிபந்தனைகளை மேலே குறிப்பிட்ட இணையத் தளத்தில் பார்கலாம்.
மருந்து அரசியல்
தென்மாநிலங்களான கேரளா,ஆந்திரா,கர்நாடகா போன்ற மாநிலங்களில் இது போன்ற மருந்தகங்களை அரசே விநியோக உரிமை பெற்று மாநிலம் முழுவதும் நடத்துகின்றன.
ஆனால், தமிழ்நாடு அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை.
ஆயிரக்கணக்கான மருந்தகங்களில் பேட்டன்ரைட் மருந்து என்று கொள்ளை லாபம் பார்க்கும் நிலையே உள்ளது.
ஜெனரிக் மருந்து விற்கும் மருந்தகங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே உள்ளன.
ஊராட்சி தலைவர்
இந்த செயலை செய்திட அனைத்து ஊராட்சி தலைவர்கள் முன்வரவேண்டும்.அப்போது தான் மலிவு விலையில் மருந்துகள் மக்களுக்கு கிடைக்கும்.
சொசைட்டியாகவோ,தனி நபரின் பெயரிலோ ஆரம்பிக்கலாம். ஆனால்,கண்டிப்பாக ஒவ்வொரு ஊராட்சியிலும் இந்த மருந்தகம் திறக்க முடிவெடுக்க வேண்டும்.
உங்களின் முயற்சிக்கு நமது இணையத் தளமும் அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருப்போம்.
விருப்பம் உள்ள ஊராட்சி தலைவர்கள் மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் தங்களை பற்றிய விவரங்களை எங்கள் இமெயில் tnpanchayat@gmail.com என்ற முகவரிக்கோ…8637689734 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அனுப்புங்கள். ஆலோசனைைகளை தெரிவிப்போம்.