ஊராட்சிக்கு ஒரு மலிவு விலை மருந்தகம்

தற்சார்பு

வெற்றிக்கான விதை வெளியே இல்லை,அது தம்மிடமே உள்ளது. ஆம்…கிராமப்புற வளர்ச்சி என்பது உள்ளாட்சி பிரதிநிதிகளிடமே உள்ளது.

பிரதமர்,முதல்வர்களுக்கு இல்லாத அதிகாரம் ஊராட்சி மன்றத் தலைவர் களுக்கு உள்ளது.ஆம்..திட்டம் தீட்டலாம்,செயல்படுத்தலாம் அதற்குரிய நிதியை ஒதுக்கலாம்,பண பரிவர்தனையும் தானே செய்யலாம்.

கழிவுளிலிருந்து இயற்கை எரிவாயு, சூரிய ஒளி மின்சாரம், மலிவு விலை பல்பொருள் அங்காடி என பல திட்டங்களை தமிழ்நாட்டில் உள்ள பல  ஊராட்சி தலைவர்கள் நடைமுறை படுத்தி உள்ளனர்.

மருந்துக்கடை(ஜெனரிக் மருந்து)

இயற்கையான விவசாயத்தை கைவிட்டு பசுமை புரட்சி என்ற பெயரில் ரசாயனம் கலந்த பிறகு, ஒட்டுமொத்த நோயும் அனைவருக்கும் வந்துவிட்டது.

ஏழை,பணக்காரன் என பார்த்து வருவதில்ல எந்த நோயும்.

ஊரக பகுதியில் வாழும் மனிதர்களுக்கு முதல் மருத்துவமனை ஊரில் உள்ள மருந்துக்கடை.

தலைவலி,காய்ச்சல் என்றால் மருத்தவரை பார்ப்பதற்கு முன்னால் மருந்துக்கடையில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது யாதார்த்தம் ஆகிவிட்டது.

ஆக…ஒரு மலிவுவிலை மருந்தகத்தை ஒவ்வொரு ஊராட்சியும் தங்களின் சார்பாக ஆரம்பிக்கவேண்டும்.

உழவர் சந்தை

  1. அதற்கான அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு உண்டா?
  2. ஜெனரிக் மருந்து என்றால் என்ன?
  3.  ஊராட்சிக்கு தினமும் ஒரு மருத்தவரை வரவழைத்து மக்களுக்கு மருத்துவம் பார்க்க வைக்க முடியுமா?
  4. நமது பாரம்பரிய மருத்துவத்தை கிராம அளவில் ஊக்குவிப்பது எப்படி?
  5. ஊராட்சி மன்றமே உழவர்சந்தையை அமைக்க முடியுமா?
Also Read  ஊராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டடத்தில் மகளிர் குழு தலையீடு

இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதிலை பெற்று விரைவில் வெளியிடுவோம்.