அமைச்சரவை மாற்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை தப்புமா?

மாற்றப்படப்போவது யார்?

திமுக அரசு பதவி ஏற்று இரண்டாண்டுகள் நிறைவுற்று,மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.

இரண்டு முறை இலாகா மாற்றத்தோடு உதயநிதி அமைச்சரானதும் நடந்தது. அந்த இலாகா மாற்றத்தில் அதிருப்தியில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சிலநாட்களாக மீண்டும் அமைச்சரவை மாற்றம் நடக்க இருப்பதாக உறுதியான செய்தியாக உலா வருகிறது.

இந்த மாற்றத்தில் ஊரக வளர்ச்சி துறையில் மாற்றம் நிகழும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சருக்கும்,துறை செயலாளர் அமுதா இஆப அவர்களுக்கும் செயல்பாட்டில் பல மாறுபாடுகள் ஏற்பட்டு உள்ளதாக செய்தி.

அமைச்சருக்கும் துறை செயலாளருக்கும்  ஒத்துபோனால் மட்டுமே துறைரீதியான செயல்பாடுகள் செம்மையாக நடக்கும் என்கின்றனர் துறை அதிகாரிகள்.

பிணக்க செயல்பாட்டால் விடுமுறையில் துறை செயலாளர் சென்றுவிட்டதாக செய்தி.

இருவருக்குமிடையே உள்ள கருத்து முரண்பாட்டால் பல கோப்புகள் இறுதி செய்யப்பட்டும் கையொப்பமிடாமல் அமைச்சர் வைத்திருப்பதாகவும்,இது குறித்து அமுதா முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது

இந்த மாற்றத்தில் அமைச்சருக்கு துறை மாறுமா? இல்லை,துறை செயலாளர் மாற்றப்படுவாரா என்பதே பனகல் மாளிகையிலும்,தலைமை செயலகத்திலும் முக்கிய பேச்சாக  உள்ளது

மே முதல் வாரத்தில் விடை தெரியும்.

Also Read  கருவூலம் மூலம் சம்பளம்-மாநிலத் தலைவர் சார்லஸ் கோரிக்கை