கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கததின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளருக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்..
அதில் குறிப்பிட்டுள்ளதாவது..
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மறுமலர்ச்சிக்கான அத்தியாயத்தை TNPASS(SNA)நடைமுறை தொடங்கி வைத்துள்ளது.இதன் மூலம் பணியாளர்களின் மாதாந்திர ஊதியம் குறிப்பிட்ட தேதியில் உறுதி செய்யப்பட உள்ளது என்பது இத்துறையில் நீண்டகாலமாக இருந்த பெரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கிறோம்.கடந்த 01.06.2023 முதல் ஊராட்சியின் வரவினங்கள் முழுமைக்கும் SNA வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவரும் சூழல் தமிழகமெங்கும் உள்ளது!
மாநில நிதிக்குழு மானியமும் தற்போது TNPASS முறையில் ஒற்றைமைய கணக்கில் வரவாக்கப்பட்டுள்ளதால் ஊதியம் பெறாத நிலை தமிழகமெங்கும் காணப்படுகிறது..எனவே ஐயா அவர்கள் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக போர்க்கால அடிப்படையில் TNPASS இணையதளத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்து மாத ஊதியத்தை பெற வழிவகை செய்யும்படி கனிவுடன் வேண்டுகிறோம்
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.