உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஊதிய குறைப்பு சரியா?

அகவிலைப்படி

கொரனா வைரஸ் உலகில் பல மாற்றங்களை செய்துவருகிறது. அதில் நல்லதும் உண்டு,மீதும் உண்டு.

ஓசோனில் ஓட்டை அடைபட்டது,வல்லரசு என கூவிய நாடுகளை புரட்டிப்போட்டது, இந்தியாவில் தற்காலிக மதுவிலக்கு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது.

தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அடுத்த வருடம் வரை நிறுத்திவைத்துள்ளது.

ஆனால்…கொரொனா தடுப்பு பணியில் நேரடியாக பணியாற்றி வரும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அறிவிக்கவேண்டும் என்றார் மூத்த பத்திரிகையாளர்.

மற்ற அரசு பணியாளர்களில் பத்து சதவீதம் தான் பணியாற்றி வருகின்றனர்.

காவல்,மருத்துவம்,உள்ளாட்சி,வருவாய் பணியாளர்கள் நூறு சதவீதம் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக…உள்ளாட்சி அமைப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி குறைப்பிலிருந்து விதிவிலக்கு அவசியம் என்றார்.

 

Also Read  தலைவர் பதவி அதிகாரம் அல்ல..மக்கள் சேவை- உரக்க சொல்லும் பேராசிரியர்