வீடு வழங்கும் திட்டத்திற்கு காலவரம்பை கைவிடுக-சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை

வேண்டுகோள்

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் R.சார்லஸ் ரெங்கசாமி தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது…

ஏழை எளியோருக்கான பசுமை வீடு வழங்கும் திட்டம் மற்றும் மத்திய அரசின் பாரதபிரதமர் வீடு வழங்கும் திட்டத்தை சிறப்பாகவும்,முன்னோடியாகவும் செயல்படுத்துவதில் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் கடந்த காலங்களில் மிக சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

தடை உத்தரவு நீடிக்கும் இந்நிலையில் கொரனா நோய் தடுப்பு பணிகளில் உள்ளாட்சிப்பணியாளர்கள் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர்..

ஏழை எளிய மக்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரம் இன்றி வீட்டிலேயே தங்கியுள்ள இச்சூழலில் பசுமை வீடுகள் திட்டம்,பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்கிடவும்,இம்மாத இறுதிக்குள்ளாக பணிகளை முடிக்க வேண்டும் எனவும் உயர் அலுவலர்கள் நிர்பந்திப்பது வருந்ததக்கது ஆகும்..

பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களுக்கே வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில்,வாழ்வாதாரம் காக்க போராடும் இச்சூழலில் ஏழை எளிய மக்கள் குறிப்பிட்ட நாளுக்குள்ளாக வீடு கட்டி முடிக்க வேண்டும் என கூறுவது ஏற்புடையதுதானா என தயவு கூர்ந்து எண்ணி இவ்வீடுகள் கட்ட தற்சமயம் நிர்பந்திக்காமல்,ஏழை எளியோர் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு வரும் வரை இத்திட்டத்தினை முடிக்க வேண்டும் என நிர்பந்திப்பதை தவிர்க்க வேண்டும்

Also Read  சுட்டெரிக்கும் வெயிலில் ஊராட்சி செயலாளர்கள்

அல்லது

இவ்வகையினருக்கு ஏதேனும் ஒரு வகையில் தலா 200000 வட்டியில்லா கடன் முன்பணமாக வழங்கி உத்தரவிட வேண்டும் என கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அம்மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்

ஏழை எளிய மக்களின் நிலையறிந்து பணியாளர்கள் சார்பாக விடுக்கப்பட்ட இந்த நியாயமான கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வரும்,மாண்புமிகு துணை முதல்வரும்,மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களும் ஏற்று தக்க உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என பயனாளிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

நியாயமான இந்த கோரிக்கை நிச்சயமாக நிறைவேற சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டியது இந்த காலகட்டத்திற்கு முக்கியம்