சுண்டைக்காய் – உணவே மருந்து தினமும் அருந்து

நம்ம மருந்து

சுண்டை அல்லது பேயத்தி,மலைச்சுண்டைகடுகிஅமரக்காய்(Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும்.

சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்.

மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். 

ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். 

வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.  குடற்புண்களை ஆற்றும்.

மோரில் சுண்டைக்காயை,  நன்கு மூழ்கியிருக்குமாறு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, வற்றலாகச் செய்துக் கொள்ள வேண்டும்.

இந்த சுண்டை வற்றலை தூள் செய்து கொண்டு, ¼ தேக்கரண்டி அளவில், தினமும், காலை, மாலை வேளைகளில், வெந்நீருடன் உட்கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். 

மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு,  சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால்…

Also Read  சர்க்கரை வேம்பு-இனிக்கும் வேப்பிலை

கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும்.

சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடிக்கஅஜீரணம் குணமாகும்.

பச்சையான இளம் சுண்டைக்காய்களை குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர மூலம் கட்டுப்படும்.

வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மும்முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். 

வயிற்றுப்புண் ஆறும்.  வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காய்     – 10
மிளகு        – 5
கறிவேப்பிலை    – 10 இலை

இவைகளை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.

சுண்டைக்காய் காரக்குழம்பு இன்றும் பிரபலமான ஒன்று.

பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் உள்ள சளிக்கட்டு குறையும். இரத்தம் சுத்தமாகும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சுண்டைக்காய்க் குழம்பு எலும்புகள் உறுதியடையவும், நாக்கின் சுவை உணர்ச்சியை அறியும் திறனை அதிகமாக்கவும். மேலும், குரல்வளம் அதிகரிக்கவும் பயன்படும்.

Also Read  மார்ச் 8ந்தேதி சிறப்பு மகளிர் கிராம சபை ௯ட்டம்

நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.  

இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும்.  உடல் சோர்வை நீக்கும்.  தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல் நீங்கும்

ஆகவே நமது நாட்டு மூலிகை மருந்துகளை பயன் படுத்தி என்றென்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்…!

நோய் வரும் முன் காக்காப்பது சிறப்பு வந்த பின் பாக்கலாம் என்றால் அது மருத்துவருக்கு சிறப்பு…

எனவே
“உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையிலே”
அன்புடன் உங்கள் சங்கரமூர்த்தி..
7373141119