சிவகங்கை மாவட்டம்
நடராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள மக்களின் விளையாட்டு திறமைகளை மேன்படுத்தித்துவதற்கு விளையாட்டு மைதானங்களை கிழ்காணும் ஊர்களில் அமைத்துக்கொண்டு இருக்கிறோம்.
வெகு விரைவில் இந்த மைதானங்கள் இளைஞர்கள் மற்றும் கிராமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும்.
1.பிலம்பிச்சம்பட்டி
ஒரு கைப்பந்தாட்ட மைதானம்
2.மும்முடுசாம்பட்டி
ஒரு கபடி மைதானம் மற்றும்
ஒரு பூப்பந்தாட்ட மைதானம்
3.கோவினிப்பட்டி
ஒரு கபடி மைதானம் மற்றும்
ஒரு கைப்பந்தாட்ட மைதானம் (கைப்பந்தாட்ட மைதானப்பணி முடிக்கப்பட்டு விளையாடுவதற்கு
அனுமதிக்கப்பட்டுவிட்டது).
இந்த செய்தி பற்றி எங்கள் இணைய குழுவில் உள்ள தேசிய அளவில் தங்கப் பதக்கம் பல வென்று கொடுத்துள்ள நீச்சல் பயிற்சியாளர் முனியாண்டி அவர்களிடம் பேசினோம்.
விளையாட்டு உடல்வலிமையை மட்டுமல்ல மன வலிமையையும் அதிகப்படுத்தும் . இதுபோல் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தவேண்டும்.
திறமையான இளைஞர்கள் கிராமத்தில் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு முறையான பயிற்சி தரவேண்டும்.
நடராஜபுரம் ஊராட்சியை எடுத்துக்காட்டாக கொண்டு அனைத்து ஊராட்சியிலும் இதுபோல ஏற்படுத்த வேண்டும்.
ஒலிம்பிக் போன்ற உலகளாவிய போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்ல வேண்டுமென்றால் கிராமத்து இளைஞர்களுக்கு உரிய பயிற்சி தந்தால் மட்டுமே முடியும்.
கிரிக்கெட்டிற்கு தரும் முக்கியதுவத்தை அனைத்து விளையாட்டிற்கும் அளிக்கவேண்டும்.
இப்போது பொறுப்பேற்றுள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் ஊருக்கு ஒரு விளையாட்டு மைதானம் என்று உறுதி எடுத்து செயல்படுத்த வேண்டும் என்றார்.