காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்- மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை

ஜான்போஸ்கோ பிரகாஷ்

காவல் ஆய்வாளரை சஸ்பென்ட் செய்க-திருச்சி மாவட்ட எஸ்பிக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை!

திருச்சி மாவட்டம்

அமையபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் விஜயநாதன் அவர்கள் கொரனா தடுப்பு பணிகளுக்கான கிருமி நாசினி பொருட்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு தனது காரில் ஊராட்சிக்கு திரும்பி வந்த போது,எதிரே வந்த வையம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம் என்பவர் இடைமறித்து வண்டி சாவியை கேட்டுள்ளார்..

அப்போது ஊராட்சி செயலர் ஒன்றிய அலுவலகத்திலிருந்து பொருட்களை பெற்று செல்வதாகவும்,வாகன சாவியை தர இயலாது என்றும் கூறியுள்ளார்.

உடனே அதிக கோபத்துடன் தான் வைத்திருந்த லத்தியால் கொலை செய்யும் நோக்கோடு ஆத்திரமாக பல முறை அடித்து துவைத்துள்ளார்.

இதில் கையில் அடிபட்ட உடன் கை வீங்கியுள்ளது..கை உடைந்துவிட்டது என கண்டுகொண்ட ஆய்வாளர்,ஊராட்சி செயலரை தனது வாகனத்தில் தூக்கி போட்டு ஏற்றியதுடன்,நிலைமை மோசமாக போவதை கண்டு தனது வழக்கமான கிரிமினல் சிந்தனையை தட்டிவிட்டு ஊராட்சி செயலர் போதையில் இருந்ததாக வழக்கு பதிந்து கணக்கை முடித்துள்ளார்.

வீடு வந்த ஊராட்சி செயலர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தியபோது கையில் 4 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  அமைச்சரோடு உள்ளாட்சி ஊழியர்களின் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

தற்போது அவர் சிகிச்சை பெற்று வரும் இச்சூழலில் கொலை வெறியோடு தாக்கிய சம்மந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவதுடன்,துறை ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்டு செய்திடவும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிந்து சஸ்பெண்டு செய்யும் வரை வையம்பட்டி ஒன்றியத்தை சார்ந்த ஒட்டுமொத்த ஊராட்சி செயலரும் இன்றுமுதல் காலவரையின்றி பணிப்புறக்கணிப்பும் செய்ய மாநில மையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

இதிலும் நடவடிக்கை இல்லை எனில் 22 ம் தேதி முதல் மாவட்ட அளவிலும் 27 தேதிமுதல் மாநில அளவிலும் பணிப்புறக்கணிப்பு செய்ய உள்ளோம்.

இவ்வாறு இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊராட்சி செயலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தும்பட்சத்தில் கிராமங்களில் கொரனா ஒழிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்படும்..

எனவே திருச்சி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீதி நெறி தவறாமல் செயல்படும் திருச்சி மண்டல ஐஜி அமல்ராஜ் அவர்கள் இதற்கு சரியான நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக நாமும் நம்புவோம்.