இனிக்கும் வேம்பு
வேப்பர மர இனங்களில் சர்க்கரை வேப்ப மரம் என ஒரு ரகம் உள்ளது. இதன் இலையை மென்றால் இனிப்பதே இதன் சிறப்பு.
பிற வேம்பு வகையில் கருவேப்ப மரம், மலை வேப்ப மரம் ஆகியவை உள்ளன. ஆயினும் இவற்றின் இலை, கொழுந்து, பூ, முத்து, குச்சி, காய், பழம், பட்டை ஆகியவற்றில் மருத்துவக் குணங்கள் உள்ளது என்பதை அனைவரும் அறிந்த ஒன்று…!
காய்ந்த வேம்புக் கட்டைகளை கறையான் கூடஅரிக்காது,
வேப்பமரக் காற்று உடலையும் உணர்வையும் நன்கு பேணுகின்றது. வேப்பம் காற்றில் பிராணவாயு அதிகம் கலந்துள்ளது.
வேப்ப மரத்திலே ஊஞ்சல், தொட்டில் கட்டி குழந்தைகளைத் தூங்க வைத்தால், சுகாதாரமான காற்றில் அருமையாகத் தூங்குவர்..!
எந்த மண் வகையிலும் வேப்ப மரம் நன்றாக வளரும்.
வீட்டைச் சுற்றிலும், தோட்டங்களிலும், தோப்புகளிலும் வேப்ப மரங்களை வளர்ப்பது மிகவும் சிறந்தது.
ஏப்ரல், மே மாதங்களில் கொத்துக் கொத்தாகப் பூக்கள் படர்ந்து காணப்படும்.
சாதாரணமாக வேப்ப மரங்களின் மருத்துவ குணங்கள் அற்புதமான, அதன் பண்புகள் ஜூரம், வாதம், மூல கணம், மந்தம், குன்மம், எரிபூச்சி ஆகியவற்றை இது ஒழிக்க வல்லது.
வேப்ப விதைக்கு விஷமும், ஜன்னியும் மாறும். நரம்பு வலிப்பு, வாதம், ஜன்னி, கிரந்தி, சொறிபுண், சிரங்கு ஆகிய நோய்களை வேப்பநெய் குணப்படுத்தும்.
தலைநோய், ஜன்னி வாதம் இவற்றை வேப்பம் பிண்ணாக்கு அகற்றும்.
குடலில் உள்ள புழுக்கள் மாய்வதற்கு, வேப்பங் கொட்டையில் வெல்லம் சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம். வேப்பம் பழ சர்பத் சருமத்திலுள்ள தோல் வியாதிகளைப் போக்கும்.
வேப்ப விதைகளிலிருந்து எடுக்கப்படும் தைலம் சரும நோய்களைக் குணப்படுத்தவும், குளியல் சோப் தயாரிக்கவும் பயனாகிறது.
வேப்பிலைகளைக் குடிநீரில் இட்டுப் பருகி வந்தால், அதீத பித்த நீர் வெளியேறி ஆரோக்கியம் கிட்டும்.
இத்தகைய மருத்துவக் குணங்களினால், வேம்பு ஓர் அற்புதமான காயகற்ப மூலிகை என்கின்றனர் மருத்துவர்கள்….!