தமிழகத்தில் கொரோணா அரசியல்

தமிழகம்

உலகெங்கும் ஒற்றை அரக்கனை அழிக்க யுத்தம் செய்து வருகின்றது.

இந்தியாவில் அனைத்து மாநில அரசும் கொரொனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டிலும் கொரொனா தடுப்பு நடவடிக்கை,ஊரடங்கு,சமூக விலகல் என அனைத்து நடவடிக்கையும் அண்டை மாநிலமும் பாராட்டும்வகையில் நடைபெற்று வருகிறது.

சமூக விலகல் மட்டும் முழுமையான அளவில் நடைபெறவில்லை என்பது வேதனை.

அரசியல்

இங்கு மட்டும் தான் கொரொனாவை தாண்டி கொடூர அரசியல் நடைபெறுகிறது.

அனைத்துகட்சி ௯ட்டம் ௯ட்டவேண்டும்  என்று எதிர்கட்சித்தலைவர் அரசியல் செய்கிறார்.

அரசாங்கம் செய்யும் செயலை அரசியல் கட்சிகளால் செய்ய முடியுமா…

தங்களது கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கொரொனா தடுப்பு பற்றி உத்தரவு போடுகிறார்.இது சரி…

ஆனால்,பி.கே.வின் ஆலோசனைப்படி மற்ற மாநில முதல்வர்களுக்கு அந்தந்த மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கோருகிறார்.

அதையே தங்களது தொலைக்காட்சியில் தொடர்நது செய்தியாக்கி அரசியல் செய்கிறார்.

இதைவிட கொடுமை

ஆளும் அரசில் முதல்வருக்கும்,அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அரசியல் நடக்கிறது.

ஆளுநரை சந்திக்க செல்லும் போது சம்பந்தப்பட்ட அமைச்சரை புறக்கணித்து அதிகாரியை அழைத்து செல்கிறார் முதல்வர்.

உயிருக்கான யுத்தத்தை உலகமே நடத்திக் கொண்டிருக்கும்போது…இந்த நேரத்தில் அரசியல். செய்யும் அவலம் தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது.

Also Read  ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு

இது தான் தமிழ்மண்ணின் சாபக்கேடு…

ஈழத்தில் தமிழ் உறவுகள் அழியும்போதும் அரசியல் செய்தோம்.

இன்று…நாமே அழிந்துகொண்டிருக்கும் போதும் அரசியல் செய்கிறோம்.

அரசியல்வாதிகளே….வரும் தேர்தலில் வாக்களிக்க மக்கள் உயிரோடு இருக்கவேண்டியது அவசியம்.

உங்கள் அரசியலை மே மாதத்திற்கு பிறகு வைத்துக்கொள்ளுங்கள்.