பூரண மதுவிலக்கு – கொரொனா கொடுத்தது

சாதனை

காந்தி பிறந்த மண்ணில்  கூட பூரண மதுவிலக்கு முழுமையாக சாத்தியப்படவில்லை.

தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் பாதிகும் மேல் தருவது டாஸமாக்.

இரண்டு கழகங்களின்ஆடசியாளர்கள் திறந்து வைத்தார்களே தவிர,யார் நினைத்தாலும் மூட முடியாத நிலை.

மதுக்கடைகளை மூடச்சொல்லி எத்தனை,எத்தனை போராட்டங்கள். திடீரென மூடினால்…எவ்வளவு பிரச்சனை வரும் தெரியுமாயென எவ்வளவு வாதங்கள் வந்தன.

இதோ…ஆறு நாட்களை தாண்டி பூரண மது விலக்கு. முதல் இரண்டு நாட்கள் கள்ளத்தனமாக மதுவை விற்றார்கள்.

அடுத்து…கள்ளச்சந்தையில் விற்பனை விலையை பத்து மடங்கு ஆக்கிவிட்டார்களாம்.

இன்னும் இருதினங்களுக்கு பிறகு மொத்தமாக கள்ளத்தன மதுவிற்பனையும் நின்றுவிடுமாம்.

கள்ள சந்தையில் குடித்தோர் சதவீதம் வெறும் பத்தைக் ௯ட தாண்டாதாம்.

ஆக….கொரொனா கொடுக்க போவது பூரண மதுவிலக்கு.

அரசியல்வாதிகளே…நல்ல வழியை கொரொனா காட்டுகிறது. ஏப்ரல் 15க்கு பிறகும் டாஸ்மாக் கடைகளை திறக்காதீர்கள்.

இல்லையெனில்…இரவு பத்து மணியிலிருந்து நள்ளிரவு வரை திறந்து வைக்க பாருங்கள். குடித்தே தீரவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் மட்டும் குடிக்கட்டும்.

Also Read  பிரதமருக்கே முன்னோடியாய் பஞ்சாயத்து