இ.எம். ஐ.
கொரொனா உலகையே உயிர் பயத்தில் வாழ வைத்துள்ள இந்த நிலையில்…
சகோதரர் ஒருவர் சந்தோசமாக சொன்ன விடயம்.
மூன்று மாதம் இ.எம்.ஐ. கட்ட வேண்டாம் என்று அரசு அறிவித்து விட்டதென்று கொரொனா பயத்தை மறந்து மகிழ்ச்சியாய் கூறினார்.
அவர் சொல்லும் தோரணை,கொரொனாவிற்கு நன்றி சொல்வது போல இருந்தது.
ஆனால்…ஆழமான உண்மை என்ன தெரியுமா?
அவரைப் போல கோடிக்கணக்கான இந்தியர்களின் பொருளாதார நிலையை காட்டுகிறது.
நடுத்தரவர்க்கத்தினரின் ஒட்டுமொத்த நிலைக்கு அவரே சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.
நிர்மலாஜி…கொரொனா ஒழிந்த பிறகு இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி சிந்தியுங்கள்.