மே 15 முதல் தொடர் போராட்டம் – சிக்கலில் ஊரக உள்ளாட்சி துறை

சென்னை

ஒரு நாட்டின் முதுகெழெம்பு கிராமமே என்றார் காந்தி. அந்த ஊராட்சிகளின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஊராட்சி செயலாளர்,தூய்மைப் பணியாளர் என பல்வேறு அரசு பணியாளர்கள் உள்ளனர்.

மக்களோடு தினமும் பழகும் அரசு ஊழியர்களில் மிக முக்கியமானவர்கள் இவர்கள்.

தங்களது முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்களை நடத்தி உள்ளனர். சமீபத்தில் கூட சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தினர்.

இறுதியாக தலைநகர் சென்னையில் தொடர் காத்திருப்பு போராடத்தை நடத்திட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பணி ஆணைக்கான அரசாணை உட்பட முக்கிய கோரிக்கைகளை வழியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளதாம்.

அவர்களின் போராட்டம் நடைபெறும் கால கட்டத்தில் உள்ளாட்சி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சரும்,துறை அமைச்சரும் துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்.

 

Also Read  இந்தியாவில் முதல் முயற்சி