சுற்றுலாத்தலமாக உள்ள ஊராட்சிகள்

ஊராட்சிகள்

தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் சில ஊராட்சிகள் சுற்றலாத்தலமாக உள்ளன.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை போன்ற சுற்றுலாத்தலங்கள் எல்லாம் ஊராட்சிகளே.

அதுபோல, கொடைக்கானலுக்கு மிக அருகில் உள்ள வில்பட்டி,பூம்பாறை போன்றவைகளும் ஊராட்சிகளே.

பேரூராட்சி,நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுலாத்தலங்களில் உள்ள வசதிகள் ஊராட்சிகளில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

ஏற்காடு,ஏலகிரி,சிறுமலை போன்ற  ஊராட்சிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மற்ற ஊராட்சிகளின் விதிமுறைகளை இந்த ஊராட்சிகளுக்கு தளர்த்த வேண்டும்.

இதுபோன்ற ஊராட்சிகளின் தேவைகளுக்கு சிறப்பு நிதி வழங்கி,பல்வேறு வசதிகளை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.

குறிப்பாக…ஊராட்சியின் சார்பாக அதிகமான தங்கும் விடுதிகள் அமைத்து,சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் செய்திட வேண்டும்.

இப்படி சுற்றுலாத்தலமான ஊராட்சிகளின் தேவைகள் பற்றி ஒவ்வொரு ஊராட்சியாக செய்தி வெளியிட உள்ளோம்.

Also Read  திருமுடிவாக்கம் ஊராட்சி - காஞ்சிபுரம் மாவட்டம்