ஏழைகளுக்கு எப்போதும் உணவளிக்கும் முனியாண்டி

முனியாண்டி

சென்னை,சாலிகிராமத்தில் உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு வழங்குவதை பல ஆண்டுகளாக தொடர்நது செய்துவருகிறார்.

காவல்துறை பணியில் சேர்ந்தவர்,அந்த துறையிலேயே நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றினார்.

அவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் தேசிய அளவில் பல தங்கப்பதக்கங்களை வென்றெடுத்துள்ளார்.

தமிழக உயர் அதிகாரிகளுக்கும்,அவர்களின் குடும்பத்தாருக்கும் நீச்சல் பயிற்சி அளித்துள்ளார்.

இதை அனைத்தையும் விட…மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்து,அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து வருகிறார்.

உணவு

சென்னை சாலிகிராமம் பகுதியில் பல ஆண்டுகளாக ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு அளித்து வருகிறார்.

உலகமே கொரொனா பாதிப்பால் உள்ள நிலையிலும்,உணவளிக்கும் உன்னத சேவையை நிறுத்தாமல் தொடர்நது செய்து வருகிறார்.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்….என கோபத்தில் கொந்தளித்த மீசை புலவனின் ஆசையை நிறைவேற்றும் அற்புதப் பணியை தொடர்ந்து செய்துவரும் முனியாண்டி அவர்களை அனைவரும் இதயத்தால் வாழ்த்துவோம்.

Also Read  உள்ளாட்சி ஊழலுக்கு எதிராக முறையிடுவது எப்படி..