உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்

 கால நீடிப்பு வழங்குக

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களுக்கு  கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அதில் அவர் ௯றி இருப்பதாவது…

தமிழகத்தில் கிராமங்கள் தோறும் உள்ள வீட்டுக்குடிநீர் இணைப்பு பற்றிய விபரங்களை மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவிட் 19 வைரஸ் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் அனைவரும் நோய்தடுப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர்.

இந்த ஊரடங்கு நேரத்தில் உள்ளாட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விபரம்,குடும்ப உறுப்பினர் விபரம்,இனம் உள்ளிட்ட விபரங்களை கேட்டுப்பெறுதல் இயலாத நிலை உள்ளது.

பல இடங்களில் வெளியூர் சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உட்புகவே இயலாத நிலை உள்ளது.

எனவே இந்த கோவிட்-19 வைரஸ் ஒழிப்பு பணிகள் முடிந்து,ஊரங்கு தளர்த்தப்பட்டு சகஜ நிலை திரும்பிய பிறகு இக்கணக்கெடுப்பினை மேற்கொள்ள  அவகாசம் வழங்கிட ஒட்டுமொத்த வளர்ச்சித்துறை பணியாளர்கள் சார்பாக கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Also Read  பேரிடர் காலத்தில் ஊராட்சி செயலர்கள் பணிமாறுதல்-சங்கத் தலைவர் கண்டனம்