சென்னை நோக்கி ஊராட்சி செயலாளர்கள்

வள்ளுவர் கோட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 06-04-2023 அன்று மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்துவதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஊராட்சி செயலாளர்கள் சென்னை நோக்கி வர இருக்கின்றனர்.

புனித வெள்ளி,பங்குனி மாத கோவில் திருவிழாக்கள் இருந்தும், தங்களின் உரிமை காக்க வள்ளுவர் கோட்டம் நோக்கி படையெடுக்க உள்ளதாக செய்தி. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக முக்கிய நிர்வாகி தெரிவித்தார்.

கோரிக்கைகள்:-

கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக மிக குறைந்த
ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். எவ்வளவோ இயக்க நடவடிக்கைகள் மேற்கொண்டாலும்
இவர்களின் வாழ்வாதாரம் இன்று வரை மேம்படவே இல்லை.

ஜான்போஸ்கோ பிரகாஷ்

உயர்ந்துள்ள விலைவாசியில்
இவர்கள் தற்பொழுது பெற்று வரும் தொகுப்பூதியம் மிக சொற்ப தொகையாகும்.எனவே மேல்நிலைத்
தொட்டி இயக்குபவர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15,000 காலமுறை ஊதியமாக நிர்ணயித்து
வழங்க வேண்டும் மற்றும் ஓய்வு பெறும் பொழுது ஓட்டுமொத்த பணிக்கொடை ரூ.2 லட்சம் மற்றும்
மாத ஓய்வூதியம் ரூ.5000 அரசு கருவூலத்தில் வழங்கிட கேட்டல்!

+ கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ. 10000 தொகுப்பு ஊதியமாக
ஊராட்சி மூலம் நேரடியாக வழங்கிட வேண்டும்!

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்ச காலமுறை
ஊதியமாக ஊராட்சிரூ. 15000 ஐ அரசு கருவூலத்தில் வழங்கிட கேட்டல்|
ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக வேலை நேரம் தாண்டி பணி செய்ய நிர்பந்தித்தல், இரவு
நேரங்கள், சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்கள் ஆகியவற்றில் ஆய்வுக் கூட்டங்கள்
நடத்துதல், அவசரப் பணி என்று சொல்லி கால நேரம் வழங்காமல் உடனே செய்ய வேண்டும் என்று
நிர்பந்தித்து நெருக்கடி நிலையை உருவாக்குவதை கைவிடுதல்!

Also Read  பொறுப்பேற்றார் பொன்னையா இஆப

*
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணிணி உதவியாளர்களுக்கு அரசாணைப்படி
உடனடியாக தேர்வு நடத்தி அரசு பணியில் ஈர்த்துக் கொள்ள கேட்டல்!

*
வட்டார / மாவட்ட சுகாதார ஓருங்கிணைப்பாளர்களின் 18 ஆண்டு கால பணிக்காலத்தை கருத்தில்
கொண்டு இடைக்காலமாக ரூ.25000 மாத ஊதியம் நிர்ணயிக்கவும் இவர்களின் வயது மற்றும் குடும்ப
சூழ்நிலை கருதியும், பணிக்காலத்தை கருத்தில் கொண்டு அரசு பணியில் ஈர்த்துக் கொள்ள கேட்டல்!
உதவி இயக்குனர் நிலையிலான பணியிடத்திற்கு தேர்ந்தோர் பட்டியலை உடனடியாக வெளியிட்டு
பதவி உயர்வு வழங்கிட கேட்டல்!

*
கொரனா காலக்கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய தூய்மை காவலர்கள், தூய்மை
பணியாளர்கள், மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோருக்கு
மாண்புமிகு, முதல்வரால் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊக்கத்தொகை ரூ.15000, 2 ஆண்டுகள்
கடந்தும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்கிட கேட்டல்!

* மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் கணினி பயிற்றுனராக உள்ளோர் மற்றும் PMAY, SBM,JJM
திட்டங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் நெடுங்காலமாக
பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு அரசு பணியில்
ஈர்த்துக் கொள்ள கேட்டல்!

+ 900 க்கும் மேற்பட்ட ஓவர்சியர்கள் பிஇ, பிடெக் முடித்து 10 ஆண்டுகளுக்கு மேலாக ஓவர்சியர்களாகவே
பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நான்காண்டுகள் முடித்துவுடன் பதவி உயர் வழங்கப்படும் என
அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் தற்பொழுது அனைத்து உதவி பொறியாளர் பணியிடங்களும்
அரசுபணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. எனவே தற்போது
உள்ள காலியிடங்களில்10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான ஓவர்சியர்களை உதவி
பொறியாளர்களாக நியமனம் செய்து முடிக்கும் வரை புதிய அரசாணையை நிறுத்தி வைத்திட கோருதல் !

Also Read  காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்- மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை

* உதவி பொறியாளர் நிலையிலிருந்து உதவி செயற்பொறியாளர் நிலைக்கு பதவி உயர்வு பெறாமல்
ஏறத்தாழ 12 ஆண்டுகளாக உதவி பொறியாளராகவே பணியாற்றி வருகின்றனர். எனவே தற்பொழுது
காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர் காலி பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்கி நியமனம்
செய்திடல் கேட்டல்.