கோரிக்கை
தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது…
கொரொனா தடுப்புப் பணியில் முக்கியதுறை சம்மந்தப்பட்வர்கள் தேரடியாக மக்களோடு மக்களாக தனது உயிரை துச்சமென மதித்து பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக…மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள்,உள்ளாட்சி அனைத்து பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கிராமப்புறத்தில் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த ஊராட்சி செயலாளர்கள்,தூய்மை பணியாளர்கள்,மேல்நிலை நீர்தேர்க்கத்தொட்டி திறப்பாளர்கள் என பல்வேறு நிலை பணியாளர்கள் மக்கள் சேவையாற்றி வருகின்றனர்.
அதில் ஊராட்சி செயலாளர்கள் மக்கள் பணியோடு அலுவலகப் பணியையும் சேர்த்து செய்து வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக சென்று வரவேண்டிய நிலையும் உள்ளது.
அப்படி செல்பவர்களை காவல்துறை வாகனங்களை தடுத்து நிறுத்தி தாக்குதலும் நடத்திவருகின்றனர்.
குறிப்பாக…தென்காசி,திருவண்ணாமலைசிவகங்கை மாவட்டங்களில் இதுபோன்ற செயல்கள் அரங்கேறி உள்ளன.
இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு ஊராட்சி செயலாளர்கள் தடங்கல் இன்றி பணி செய்திட வழிவகை செய்திட கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜான்போஸ்கோபிரகாஷ் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.