உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஊராட்சி செயலாளர்கள் கவனத்திற்கு…

பாரம்பரியம்

உலகமெங்கும்  கொரொனாவால் உயிரிழப்பு பண்மடங்காக இருக்கும் நிலையில்,இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகம் என்றாலும் உயிரிழப்பு குறைவு.

ஏன் இந்த நிலை…மூத்த மருத்துவர் ஒருவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? அது தமிழர்களின் உணவு பழக்கம் மட்டுமே காரணம்.

மஞ்சள்,மிளகு,சீரகம்,வெந்தயம்,பூண்டு என நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை உண்டு வந்தோம்.சரி…நோய் எதிர்ப்பு உணவுகளை உண்டு வந்த நம்மை எப்படி நோய் தாக்கியது?

இந்த கேள்விக்கு பதில்…இயற்கை வேளாண்மையை கைவிட்டு ரசாயானம் பயன்படுத்தி உணவையும் மலடாக்கிய காரணத்தால் தான் இந்த பாதிப்பு.

ஊராட்சி

ஊராட்சி தலைவர்களுக்கு உச்சபட்ச அதிகாரத்தை பஞ்சாயத்துராஜ் சட்டம் கொடுத்துள்ளது.

உங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் இயற்கை விவசாயத்தை நடைமுறை படுத்துங்கள்.

மண்ணை நேசிக்கும் இளைஞர்களை இந்த பணிகளுக்கு பயன்படுத்துங்கள். உணவே மருந்தென்ற நம் முன்னோர் பொன்மொழியை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பெரும் பொறுப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமே உண்டு.

கட்சியும்,சின்னமும் பார்க்காது உங்களை மட்டுமே நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்யும் நற்காரியம் இது மட்டுமே.

மருத்துவம்

ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும்  மாலை நேரத்தில் இரண்டு மணிநேரம் ஊராட்சி அலுவலக கட்டிடத்திலே மருத்துவமனை.

Also Read  சோழபுரம் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

அருகில் நகர்புறத்தில் உள்ள தனியார் மருத்துவமனையோடு ஒப்பந்தம்போடப்பட்டு,தினம் ஒரு மருத்துவரை அழைத்துவரலாம்.மக்களுக்கு சேவை செய்ய இலவசமாகவே வருவதற்கு பல நல்ல மருத்துவர்களும் தயாராகவே உள்ளனர்.

அடிப்படை மருந்துகளை மக்களுக்கு இலவசமாக ஊராட்சியே கொடுக்கலாம்.(இந்த திட்டம் பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர்கள் நமது இணையத்தில் விரைவில் விரிவாக எழுதுவார்)

அதிலும் குறிப்பாக…நமது மரபுவழி மருத்துவரையும் வரவழைத்து நோய் எதிர்ப்பு சக்தியை நிரந்தமாக தரும் மூலிகை மருந்துகளை தருவது மிக அவசியம்.

இந்த செயல்களை ஊராட்சி செயலாளர் உள்ளாட்சி பிரதிநிதிகளோடு இணைந்து செய்திடல்வேண்டும்.

அதற்கான அனைத்து ஆலோசனைகளையும் நமது இணையத்தின் ஆலோசகர்கள் உங்களுக்கு வழங்கிட தயாராக உள்ளனர்.

இந்த செய்தியை படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும்,உள்ளாட்சி பணியாளர்களுக்கும் பகிருங்கள். நல்லதை அனைவரும் இணைந்து செய்வோம்.