ஊராட்சி செயலாளர்களுக்கு சங்கத் தலைவரின் வழிகாட்டுதலும்,வேண்டுகோளும்

ஜான்போஸ்கோ பிரகாஷ்

ஊராட்சி செயலர் பணியிட மாறுதல் தொடர்பான TNPSA அமைப்பின் நிலைப்பாடும்..விளக்கமும்…

ஊராட்சி செயலர்களை பணியிட மாறுதல் செய்வது தொடர்பான அரசாணை மற்றும் இருவேறு மாவட்ட வளர்ச்சிப்பிரிவு உத்தரவுகளுக்கிடையேயான உத்தரவுகளை பற்றி பல்வேறு மாவட்டங்கள் மாநில மையத்தை தொடர்புகொண்டு பேசுகின்றனர்.

அரசாணை கூறுவது என்ன?

ஒரு ஊராட்சி செயலர் பணியிட மாறுதல் செய்யப்படும் நேர்வை மிக தெளிவாக அரசாணை எண் 72,நாள்:-09.07.2013 விளக்குகிறது.

அந்த அரசாணையில் பத்தி எண் 11 ல் ஒரு ஊராட்சி செயலர் நிர்வாக ரீதியாக பணியிடமாறுதல் செய்யப்படும்போது தகுந்த காரணங்களும்,அக்காரணங்கள் சரியானதுதானா என்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

வட்டாரத்துக்குள்ளான பணியிட மாறுதல்களை வ.வ.அலுவலர்(கி.ஊ) அவர்களால் வழங்கப்படும் நேர்வில் சம்மந்தப்பட்ட ஊராட்சி செயல்அலுவலர்களான கிராம ஊராட்சி தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும்.

இந்த இரண்டு வழிகள் இல்லாது பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு பல மாறுதல்களுக்கு உயர்நீதிமன்ற தடையாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ந.க.உ.இ3/1931/2019,நாள்:-18.05.2020 வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் வட்டாரத்துக்குள் வழங்கப்படும் பணியிட மாறுதல்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முன் அனுமதியை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது..இதைப்போன்ற உத்தரவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த 2014 ம் ஆண்டே வெளியிட்டுள்ளார்.

இது இப்படி இருக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர்(வளர்ச்சி)அவர்கள் ந.க.எண் 57/2020/அ5-வளர்ச்சி,நாள்18.05.2020 ம் தேதிய கடிதம் வாயிலாக ஒரு வழிகாட்டுதல் வழங்கியுள்ளார்..

அதில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் ஊராட்சி செயலர்கள் பணிபுரிவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடையே இணக்கமான நிலை இல்லை என்றும்,இதனால் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியிடத்தில் உள்ளவர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே அரசாணையை பின்பற்றக்கூடிய அலுவலர்களிடமிருந்து இருவேறான கடிதங்கள் வரப்பெற்றுள்ளன.

Also Read  காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்- மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை

இது பணியாளர்களிடையே குழப்பத்தை உருவாக்குகிறது..அதனால் பலர் மாநில மைய நடவடிக்கை தேவை எனவும் கேட்டு வருகிறீர்கள்.

ஊராட்சி செயலர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் வட்டாரத்துக்குள் வழங்க வேண்டும் என்பது TNPSA அமைப்பின் நெடுங்கால கோரிக்கை..இதில் மாற்றுக்கருத்தே இருக்கப்போவதில்லை.

ஆனால்…

தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு ஒத்துவராத செயலர்களை இடமாறுதல் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கட்டாய பணியிட மாறுதல் என்பது ஏற்கதக்கதல்ல.

ஒரு செயலரை ஒரு செயல்அலுவலர் பணியிட மாறுதல் செய்திட கூறுகிறார் எனில் அதற்கான காரணங்களை நிர்வாக அதிகாரிகள் கூறுவதில்லை..மாறாக தேர்தலில் வேலை பார்த்தார்,பணம் சம்பாதிக்க முடியவில்லை,எதிர்த்து பேசுகிறார்,தலைவர்களின் கணவர்களுக்கு அடங்கவில்லை என்பதனைபோன்ற அற்ப காரியங்களுக்காக மாற்றப்படும்போது அச்செயலர் அப்பணியிட மாறுதலை ஏற்காமல் பல்வேறு தொல்லைகளை சந்திக்கிறார்.

இப்பணியிடம் எப்படிப்பட்டது எனில்,ஒரு செயல் அலுவலர் 1 லட்சம் திருட கூறுகிறார் எனில் அதனை திருடிக்கொடுக்க வேண்டும்..இல்லை எனில் அவர் சரியில்லை என பல காரணங்களை அடுக்கி பணியிட மாறுதலை வழங்கிட வைத்துவிட முடியும்..அரசியல் ரீதியாகவும் பல அழுத்தங்களை கொடுத்து பணியிட மாறுதல் செய்த பிறகே அச்செயல் அலுவலர் ஓய்வார்.

அப்படிப்பட்ட அற்புதமான பணி இது.

தவறை செய்யாவிட்டால் செயல் அலுவலரால் அற்ப காரணங்களை அடுக்கப்பட்டு அதே வ.வ. அலுவலரால் பணியிட மாறுதல் செய்யப்படுவார்..செய்தால் அதே ஆய்வு அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு துணைக்குற்றவாளியாக்கப்பட்டு பணியிடை நீக்கம்.

ஊராட்சி செயலர் செய்ய வேண்டியது என்ன?

நாம் பலமுறை இதுகுறித்து பதிவிட்டுள்ளோம்..ஒரு செயல் அலுவலரோடு ஒத்துப்போகவில்லை எனில் ஊராட்சி செயலர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் தானாக முன்வந்து பணியிட மாறுதல் கேட்டுப்பெற வேண்டும்.

பணியிட மாறுதல்களை தாங்களாக பெறவில்லை எனில் கட்டாயம் அது கிடைக்கத்தான் செய்யும்..அப்போது மன உளைச்சல்,நீ பெரிய ஆளா,நான் பெரிய ஆளா என்ற போட்டி மனப்பான்மை உருவாகும்.

Also Read  தூய்மை பணியாளர்கள் என அரசாணை- கடைபிடிக்காத அரசுத்துறை

நம்மில் சிலர் துணைத்தலைவர்களை கையில் வைத்துக்கொள்ளுவது,மெம்பர்களை மெஜாரிட்டி வைத்து நிர்வாகத்தை குழப்புவது போன்றவற்றையும் செய்துகொண்டுதான் உள்ளனர்.

இது தேவையற்றது.

இன்றைய சூழலில் பலர் ஒருவேளை உணவுக்கே கடினப்படும்போது,நம் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாவிட்டாலும் ஒரு வாழத்தகுதியான ஊதியத்தை பெறுகிறோம்.

ஆகவே…

உயர் அலுவலர் தங்கள் சிந்தனைக்கேற்ற,அழுத்தங்களுக்கேற்ற உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே இருக்கட்டும்..அதனைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று..ஒத்து வரவில்லை,நிர்வாகம் உங்களுக்கு செவி மடுக்கவில்லை எனில் தாராளமாக முன்வந்து பணியிட மாறுதல்களை பெறுங்கள்.

நிம்மதியாக வாழ வழி இது ஒன்றே

போட்டி பொறாமை உள்ள இக்காலகட்டத்தில், ஊராட்சி செயலர் போடும் செருப்பு கூட விலை என்ன இருக்கும் என்று கலாய்க்கும் இந்நேரத்தில் வீணான விதண்டாவாதங்களை கையில் எடுக்காமல் மேற்சொன்ன ஒரே வழிமுறையை பின்பற்றி மகிழ்வுடன் பணியை மேற்கொள்ளுங்கள்.

விரைவில் இந்நிலை மாறும்..மெல்ல மெல்ல தரமான பதவியாக இப்பதவியை மாற்ற இவ்வமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது என அனைவரும் அறிவீர்கள்.

நிர்வாக மனக்கசப்புகள் இல்லாது வேண்டுமென்றே உயர் அலுவலர் ஒரு செயலருக்கு பணியிட மாறுதல் வழங்குகிறார்,செயல் அலுவலர் பணியிட மாறுதலை ஏற்கவில்லை என்ற நேர்வில் அதனை தடுத்திட அச்செயல் அலுவலர்களுக்கே அதிகாரம் உண்டு.உங்கள் முறையீட்டை செயல் அலுவலர்களை வைத்தே முடிக்கலாம்..அப்படியும் முடியவில்லை எனில் அமைப்பை தொடர்புகொள்ளும்போது நிச்சயம் தரமான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே ஒற்றுமையுடன்,இணக்க சூழலில் மகிழ்வுடன் பணியை மேற்கொள்ள மீண்டும் ஒருமுறை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்
மாநில தலைவர்
TAMILNADU PANCHAYAT SECRETARIES ASSOCIATION
மாநில மையம்