கொரோனா விழிப்புணர்வு-ஜான்போஸ்கோபிரகாஷ் அழைப்பு

இயன்றதை செய்வோம்..வாருங்கள்

கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதன் பேரில்,

பள்ளிக்குழந்தைகளிடையே கைக்குட்டை பழக்கத்தை உருவாக்கிட ஏதுவாக,

எனது ஊராட்சியில் உள்ள அத்தனை பள்ளிகள்,அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக வரும் வாரம் கைக்குட்டை இலவசமாக வழங்கிட உள்ளேன்.

இதனைப்போல ஒவ்வொரு ஊராட்சி செயலரும் அவரவர் சூழலுக்கு ஏற்ப கைக்குட்டைகளை வாங்கி அவரவர் பணியாற்றும் ஊராட்சியில் உள்ள பள்ளி,அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குவதுடன்,கைக்குட்டை பயன்பாடு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also Read  குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..!