மலிவு விலை மருந்தகமும்- நடைமுறை சிக்கல்களும்

மலிவு விலை மருந்தகம் பற்றி சிவகங்கை மாவட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜபுரம் ஊராட்சி தலைவர் நமது இணையத்திற்கு தெரிவித்துள்ள கருத்து

ஐயா வணக்கம்,

நீங்கள் சொல்லும் திட்டம் ஒரு அருமையான
மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதை நான் மறுக்கவில்லை .

ஆனால் நிர்வாகம் மற்றும் வணிக
ரீதியாக இதை ஆராயும் போது இந்த திட்டத்தை வெற்றிகரமாக நமது பஞ்சாயத்தில் செயல்படுத்து வது என்பது கேள்விக்குறியாதே.

காரணம்

1.நமது ஊராட்சியானது 9 சிறிய ஊர்களை கொண்டுள்ளது.
2 இங்கு இருக்கும் அனைத்து ஊர்களும் முக்கிய சாலையோரத்தில் அமைந்தது அல்ல. மிகவும் ஒதுக்குபுறத்தில் மற்றும் உள்ளே அமைந்துள்ளது
3. நமது ஊரை சார்ந்தவர்கள் பெரும்பாலும் வெளி ஊரில் தொழில் செய்து அங்கே வாழ்த்துவருகிறார்கள்.
4. நமது நடராஜபுர பஞ்சாயத்தின் முக்கிய சாலைகள், பேருந்து நிறுத்தம், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சந்திப்புகள் அனைத்தும் நமது பக்கத்து ஊரில் உள்ள பெரிய மக்கள் தொகை கொண்ட #பனங்குடி என்னும் ஊராட்சியில் பல காலங்களுக்கு முன்பே இணைக்கப்பட்டுள்ளது
இதனால் இந்த பகுதிகளின் அனைத்து வரி மற்றும் வருமானங்களும் பனங்குடி பஞ்சாயத்து செல்கின்றன.
6.மேலும் வாடகை அல்லது சொந்த கட்டடங்களோ நமது பஞ்சாயத்துக்கு இல்லை.
மேற் சொன்ன காரணங்களுக்காக தான் நாங்கள் தயங்குகிறோம்.

Also Read  SNA கணக்கு பற்றி முதுகுளத்தூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம்

நடராஜபுரம் ஊராட்சி தலைவரின் சொல்லும் காரணங்கள் அனைத்தும் உண்மை.

அப்படியெனில் என்ன செய்வது.

அதிக மக்கள் தொகையும்,வரவு செலவு அதிகம் உள்ள ஊராட்சிகளில் தொடங்கிட உள்ள வாய்ய்பை பார்க்கலாம்.

குறிப்பாக…மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்துவதை பற்றி ஆராயலாம்.

நல்ல பணிகளை மட்டுமே செய்துவரும் அறக்கட்டளை நடத்துபவர்களை அணுகலாம்.

இப்படி…பல யோசனைகளை பல்வேறு துறைசார்ந்தவர்கள் ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.

நம்மை பொறுத்தவரை மக்களுக்கு மலிவு விலையில் மருந்து கிடைக்கவேண்டும்.

அதற்குரிய வழிகளை ஆன்றோர் பலரிடம் ஆலோசித்து அவர்களின் கருத்துக்களை தொடர்ந்து செய்தி ஆக்குவோம்.

முயற்சிப்போம்…முடியாதது என்று எதுவும் இல்லை.