கலெக்டர் அதிகாரம்…கலக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள்

குடிநீர் இணைப்பு

தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் பிரதான பிரச்சினை குடிநீர் இணைப்பு தான் தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருமே வீட்டிணைப்பு வழங்குவதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதை நிறைவேற்றவும் முணைப்போடு செயல்படுகிறார்கள்.

தற்போதைய சூழலில் ஆட்சியரிடமிருந்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டு ஊராட்சி நிர்வாகங்கள் ஆட்சியரிடம் அனுமதி பெற்று குடிநீர் இணைப்பு வழங்கலாம் அல்லது வழங்க கூடாது என்பதை அறிவிப்பாக பத்திரிக்கைகளின் வாயிலாக வெளியிட வேண்டும்.

இல்லையெனில்,வாக்குறுதி கொடுத்த தலைவர்களை மக்கள் தொடர்ந்து வலியுறுத்துவர்.

அதிகாரத்தை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு,சிக்கலில் பஞ்சாயத்து தலைவர்களை அரசு மாட்டவைத்து விட்டது.

இப்பிரச்சனைக்கு தீர்வு அமைச்சர் வேலுமணி கையில் தான் இருக்கிறது.

 

Also Read  திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்கள் வழங்கி வரும் மருதுஅழகுராஜ்