காலிப் பணியிடங்கள் நிரப்புவது எப்போது?

முடிவெடுப்பாரா அமைச்சர்.

ஊரகத்துறை

நாட்டின் முதுகெழும்பே கிராமம்தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்கள் நீங்கலாக நடந்து முடிந்துள்ளது.

தேர்ந்தெடுக்கட்டுள்ள பிரதிநிகள் பதவி ஏற்றுள்ளனர். பதவி ஏற்றவர்களில் 75 சதவீதம் புதியவர்கள். அன்றாட பணிகளை அறிந்திராவர்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு விபரங்களை எடுத்துச்சொல்லுவது பஞ்சாயத்து செயலர்களின் பணி.

நமது இணையத்தின் சார்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுக்கு வாழ்த்து தெரித்தோம்.

பல தலைவர்கள் தங்கள் பஞ்சாயத்தில் செயலர் பணி காலியாக உள்ளது என்று வேதனையை வெளிப்படுத்தினர்.

நாம் விசாரித்த போது,இதே நிலைமை தமிழ்நாடு முழுவதும் இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

அதிமுக்கிய அடிப்படையான இந்த காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவது அவசரமான அவசியம்.

மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து,விண்ணப்பங்களும் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விரைந்து பணியிடங்கள் நிரப்ப வேண்டும். மே மாதம் மீதம் உள்ள உள்ளாட.சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவித்துவிட.டால், விதிகள் அமலுக்கு வந்த பிறகு பணியிடங்கள் நிரப்பிட முடியாது.

விரைந்து முடிவெடுப்பாரா வேலுமணி…

Also Read  ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இலவச பயிற்சி- செய்தி உண்மையா?