ஆன்லைன் வரிவசூல் எந்த கணக்கிற்கு செல்லும்?

SNA

12525 ஊராட்சிகளிலும் ஆன்லைனில் அனைத்து வரிகளும் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒரு நபர் செலுத்தும் வரிப் பணம் அவரின் ஊராட்சி கணக்கிற்கு செல்லும் என்ற கேள்விக்கான பதிலை தேடினோம்.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள்,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பேசியதன் தொகுப்பு.

இதுவரை வரிவசூல் செய்யப்பட்டு அந்தந்த ஊராட்சிகள் அருகில் உள்ள வங்கியில் வைத்துள்ள முதல் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இனி, மாநில ஒருங்கிணைந்த கணக்கில்(SNA) வரவு வைக்கப்படும்.

12525 ஊராட்சிகளுக்கும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வங்கியில் தனித்தனியே ஊராட்சி வாரியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள கணக்கு எண்கள் 1,2மற்றும் 7 என்ற மூன்றையும் ஒன்றிணைத்து ஒரே கணக்காக ஆரம்பித்து உள்ளது ஊரக வளர்ச்சித்துறை.

இந்த ஒருங்கிணைந்த கணக்கு எண் ஒன்றில் உள்நுழைந்து நிர்வகிப்பதற்கு ஊராட்சி செயலாளரின் கைபேசி எண்ணிற்கு OTP வரும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வரும்போது ஒருங்கிணைந்த கணக்கின் விவரங்களை ஊராட்சி செயலாளர்கள் அறிந்து கொள்ள முடிவும்.

அதன்பிறகு,ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி தலைவர் மற்றும் துணைத்தலைவர் கையெழுத்தோடு வரவு செலவுகளை செயல்படுத்தலாம்.

ஆன்லைனில் வரிவசூலிக்கும்போது அது நேரடியாக SNA வங்கி கணக்கிற்கு செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் கணினி வழியில் ரசீது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலரிடம் பணமாக செலுத்தும் போது அத்தொகையை ஊராட்சி செயலர் ஏற்கனவே உள்ள வங்கி கணக்கில் செலுத்தி அத்தொகையை SNA கணக்கிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்..

Also Read  ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?

பிளான் அப்ரூவல்,லேஅவுட் அப்ரூவலுக்கான இணையதளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.அது முடிவுற்றவுடன் பல்வகை ரசீது உள்ளிட்ட அனைத்தும் கணினி வழி மட்டுமே நடக்கும்

வரைபட அனுமதி வழங்குவது மற்றும் பிளான் அப்ரூவல் வழங்குவதில் ஒற்றைச்சாளர முறை பின்பற்றப்பட உள்ளதால் லஞ்ச லாவண்யங்கள் பெருமளவு குறையும் என கூறப்படுகிறது

உள்ளாட்சி அதிகாரத்தை பறிக்காமல் நவீனத்தை புகுத்தும்போது நல்லது நடந்தால் அதனை வரவேற்போம்.