இந்த மாதம் இவர்- சிறந்த பஞ்சாயத்து தலைவர்

மக்கள் சேவை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் (9மாவட்டங்கள் தவிர்த்து) நடையெற்று முடிந்து மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்று சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

நமது இணையம் ஆரம்பித்து குறுகிய காலத்தில் பல விசயங்களை அறிந்து வருகிறோம்.

பல தலைவர்கள் பத்திரிகை என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள்.

சிலபேர்களே அகம் மகிழ்ந்து தாம் செய்துவரும் செயல்களை பட்டியலிட்டனர்.

பல ஊராட்சிகளில் பஞ்சாயத்து தலைவர்களுக்கும்,ஊராட்சி செயலர்களுக்கும் ஒத்துப்போவதில்லை.

இப்படி…பல அனுபவங்கள் கிடைத்து வருகின்றன.

இந்த மாதம் இவர்

ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியை முழுமையாக உலா வருவது.மக்களின் பிரச்சனையை தலைவர்,உறுப்பினர்கள்,செயலர் மற்றும் பணியாளர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை முழுமையாக பதிவிட உள்ளோம்.

வரும் ஏப்ரல் முதல் எங்கள் இணையத்தின் சார்பாக விருதுநகர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் உலாவர உள்ளோம்.

எங்கள் பயணத்தின் போது நடந்தவைகளை அப்படியே பதிவுசெய்வோம்.

மக்கள் சேவையில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் உண்மை நிலையை உலகிற்கு தெரிவிப்போம்.

இந்த பணி எங்கள் இணைய தளத்தின் ஆலோசகர்களின் வழிகாட்டலின்படி நடைபெறும்.

கிடைக்கப்பெறும் அனைத்து விசயங்களையும் அரசிற்கு உரியமுறையில் தெரிவிப்போம்.

 

Also Read  பஞ்சாயத்து தலைவரும்-செயலரும்