இருக்கு..ஆனா நடக்காது – பன்னப்பள்ளியில் ஊராட்சி கட்டிட பிரச்சனை

கிருஷ்ணகிரி மாவட்டம்

உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்துவது என்பது குதிரைக்கொம்பு அதில் எல்லா மக்களையும் திருப்திப்படுத்துவது என்பது சிரமமான ஒன்று…!

இதில் பஞ்சாயத்து அனுபவம் பெற்றவர்களுக்கு அதைப் பற்றி நன்கு தெரியும்.

ஆனால் அனுபவம் இல்லாதவர்களுக்கோ ஆவேசம் மட்டும் தான் வரும்…

அப்படி நடந்த சம்பவம் ஒன்று தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொரோனா பதட்டம் உள்ள சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னப்பள்ளி கிராம ஊராட்சியில் இன்று நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவம்..

பன்னப்பள்ளி கிராம பஞ்சாயத்தில் ஏகப்பட்ட முரண்பாடான சம்பவங்கள் உண்டு.

அதில் பிரித்து..பிரித்து.. பார்க்கும் நிகழ்வுகளும் பல உண்டு அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று இன்று நடந்தது..

பன்னப்பள்ளி பஞ்சாயத்து மக்களின் வரி பணத்தில் சில லட்ச ரூபாய் பணத்தில் பஞ்சாயத்து கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது.

அதில் பஞ்சாயத்து நிர்வாகம் நடக்க வேண்டும் என்பது தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு உறுப்பினர்களின் வேண்டுகோள்.. ஆனால் நடப்பதோ வேறு.

பஞ்சாயத்து கட்டிடத்தை தவிர்த்து வேறு இடங்களில்  நடத்திக்கொண்டு இருக்கிறது பஞ்சாயத்து நிர்வாகம்…

இதை தவிர்க்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள்…..

ஊராட்சி மன்ற தலைவர்
ஊராட்சி மன்ற தலைவர்

இந்த முரண்பட்ட தகவல்களை கேள்விப்பட்டவுடன் நாம் பஞ்சாயத்து தலைவர் மஞ்சுநாத் கவுடாவிடம் தொடர்புகொண்டோம்.

Also Read  நஞ்சைகாளக்குறிச்சி ஊராட்சி - கரூர் மாவட்டம்

அதைத் தொடர்ந்து பஞ்சாயத்து செயலாளருடன் தொடர்பு கொண்டோம்,

நமக்கு தொடர்ந்து இணைப்பு கிடைக்கவில்லை, அதைத் தவிர்த்து.
அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை விசாரித்த போது.

இன்று நடக்க இருந்த பஞ்சாயத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு.
அதை வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நடத்துவதாக இருக்கிறது என்ற செய்தி நமக்கு கிடைக்கப்பெற்றது.

அதைத்தொடர்ந்து நாம் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் தொடர்புகொண்டு பேசிய போது, அதற்கு அவர் கூறிய பதில்..

சார் உண்மைதான் அந்த கட்டிடத்தில் கூட்டம் நடைபெறவில்லை என்று அங்கு இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்தார்கள்.

ஆனால் அந்தக் கட்டடத்தின்  தற்போதைய நிலை என்ன என்று எனக்கு சரிவர தெரியவில்லை.        இன்று நடக்க வேண்டிய கூட்டத்தை நான் ரத்து செய்துவிட்டேன்.
வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி இந்த கூட்டத்தை நடத்தலாம் என்று தெரிவித்து உள்ளேன்.

அந்த கட்டிடத்தின் நிலை என்ன..? அதில் என்ன பிரச்சனை..?
என்பது பற்றி எங்களது அலுவலகத்திற்கு  எந்தவிதமான புகாரும் வரவில்லை…

அதுகுறித்து நான் மேல் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன்.. என்று நம்மிடம் கூறினார் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அதிகாரி…

அதைத்தொடர்ந்து இன்று  நடக்க இருந்த பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு சென்று வந்த உறுப்பினர்களிடம் கேட்டபோது.
அவர்கள் கூறியது.

Also Read  நடுப்பட்டி ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்

சார் எங்களுக்கு சரியான பதில்  கிடைக்கவில்லை என்று மட்டும் கூறினார்கள்.

சாதாரண பஞ்சாயத்து கூட்டத்திற்காக, அதுவும் ஒரு கட்டத்தையே பயன்படுத்தாமல் யாருக்காக எதற்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு செய்கிறார்கள் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை…

இப்படிப்பட்ட ஒரு அவலமான நிலை பன்னப்பள்ளியில் மட்டுமில்லை.
தமிழகத்தில்  பல பஞ்சாயத்து நிறுவனங்களில் இது போன்ற மோடி மஸ்தான் கதை உள்ளது…

அவற்றை நாம் தொடர்ந்து வெளியிடுவோம்….!