உழவர் உற்பத்தி குழுக்களுக்கு பண்ணை இயந்திரம் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் வட்டாரத்தில் உள்ள ஆலூர், அச்செட்டிப்பள்ளி, நாகொண்டப்பள்ளி, கணுகொண்டப்பள்ளி, மல்லசந்திரம், தாசரிப்பள்ளி, காளகஸ்திபுரம் ஆகிய ஏழு கிராமங்களில், 2019 – 20ம் ஆண்டில், கூட்டு பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமத்திலும் தலா, 20 விவசாயிகள் வீதம், 100 பேரை ஒருங்கிணைந்து மொத்தம், 35 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில், ஒவ்வொரு ஐந்து உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏழு கிராமங்களில் மொத்தம், ஏழு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு உற்பத்தி குழுக்களுக்கும், பண்ணை இயந்திரங்கள் வாங்க, கூட்டுப்பண்ணைய திட்டத்தில் தலா, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 லட்சத்தில் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஜக்குல்ல அக்கந்தராவ் முன்னிலையில், நேற்று வழங்கப்பட்டன.

ஓசூர் வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன், வேளாண்மை அலுவலர்கள் பன்னீர்செல்வம், ரேணுகா, துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

Also Read  பெலத்தூர் ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்