மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஜான்போஸ்கோ பிரகாஷ் நன்றி

ஜான்போஸ்கோ பிரகாஷ்

மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த ஊராட்சி செயலருக்கு மதிப்பூதியம் வழங்கவேண்டி மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்ததன் விளைவாக கடந்த 18.02.2020 அன்று ஊராட்சி செயலரின் அடிப்படை ஊதியத்தில் 50% வழங்கி ஆணையம் உத்தரவிட்டது..

தற்போது இன்றைய தேதியில் அத்தொகையை விடுவித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்து தனி ஆணையாக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது..இது ஊராட்சி செயலரின் உழைப்பை அங்கீகரிக்கும் விசயமாகும்.

மதிப்பூதியம்

ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் உள்ள 9624 ஊராட்சி செயலருக்கு தலா 8500 வீதம் 818,04,000 ஒதுக்கீடு செய்துள்ளது வரலாற்று நிகழ்வாகும்.

TNPSA அமைப்பின் சார்பாக ஆணையரிடம் தயவு செய்து ஊராட்சி செயலருக்கு தனி ஆணை பிறப்பித்தால் மட்டுமே அலுவலர்கள் தொகை வழங்குவார்கள் இல்லை எனில் வழங்க வாய்ப்பில்லை என கோரிக்கை வழங்கி பேசப்பட்ட நிலையில் இன்று தனியே உத்தரவிட்டது மிகசரியான வரவேற்கதக்க நடவடிக்கையாகும்.

இதற்காக ஆணையத்துக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநில மையம்
TNPSA

Also Read  ஊராட்சி செயலாளர் - OTP - சம்பளம் = இனி இப்படித்தான்!