கற்றாழை…! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து….!

இயற்கை மருந்து

இயற்கை மருந்து

கற்றாழையில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸால் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.

மேலும் இதன் ஜெல்லில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மூட்டு வீக்கம் மற்றும் வாத நோயை குறைக்க உதவிகரமாக இருக்கிறது.

கற்றாழை சாறு சிறந்த செரிமான உணவென கூறப்படுகிறது. ஒரு கப் நிறைய கற்றாழை சாறு மலச்சிக்கல் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகளை நீக்க உதவும்.

கற்றாழை, உயிரணுக்களை நைட்ரிக் ஆக்சைடு மற்றும் சைட்டோகீன்களை உற்பத்தி செய்ய வைத்து, உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது.

கற்றாழை உங்கள் டயட்டின் வளர்ச்சியை மேம்படுத்தி, உங்கள் எடை குறைப்பு சாத்தியத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

கற்றாழை ரத்தச் சோகை உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத தயாரிப்புகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இது உடலில் உள்ள சிவப்பு இரத்த அனுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உங்களுடைய ஹீமோகுளோபின் அளவை சரியான நிலையில் வைத்திருக்கிறது.

கற்றாழை ஜெல்லில் வைட்டமின் ஏ, பீடா- கேரோடீன் மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்ட ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்திருக்கிறது,

இவை அனைத்தும் உங்களுடைய தோல் முதிர்ச்சியடைவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளை தடுத்து உங்கள் தோலை பாதுகாக்கிறது.

Also Read  அரைக்கீரை - உணவே மருந்து தினமும் அருந்து

தோல் மீது கற்றாழை ஜெல் உபயோகிப்பது, தோலிற்கு ஒரு பாதுகாப்பு அடுக்கு போன்று செயல்படுகிறது.

மேலும், எரிந்த தோல் மீது குளிர்ச்சியான கற்றாழை ஜெல் தேய்ப்பது உடனடி குளிர்ச்சியை அளித்து, மேலும் உங்கள் தோலை குணப்படுத்துகிறது.

கற்றாழையில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் பூச்சி கடிகள் மற்றும் தோலின் மீதுள்ள தடிப்புகள் உள்ளிட்டவற்றை குணப்படுத்த உதவுகிறது.

சிறிய காயத்திற்கு கூட கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். பலரும் கற்றாழையை சவரம் செய்த பிறகு தோலை ஃப்ரஷாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உபயோகிக்கும் லோஷனாக பயன்படுத்தி வருகின்றனர்.

கற்றாழை ஒரு இயற்கையான ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது:

அதில் உள்ள ப்ரோடியோலிடிக் என்சைம்ஸ் முடியை வேரிலிருந்து வலுப்படுத்தி மென்மையாகவும் மற்றும் பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

நம்முடைய உச்சந்தலையில் இருக்க வேண்டிய பிஹச் அளவு 5.5, இந்த அளவு பாதிக்கப்படுகிற போது பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது. ஷாம்பூவில் உள்ள சில பொருட்கள் உங்கள் உச்சந்தலையில் உள்ள பிஹச் அளவை மாற்றியமைக்கக்கூடும். கற்றாழை உங்கள் உச்சந்தலையில் ஈரப்பதம் மற்றும் பிஹெச் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்துகிறது, இது மேலும் முடிக்கு மென்மையான தோற்றத்தை தருகிறது.

உங்களுடைய உச்சந்தலை உலர்ந்து மற்றும் சீரற்று இருக்கிறதென்றால், கற்றாழை தான் உங்களுடைய ஒரே தீர்வு.

Also Read  கற்றாழை - ஆண்களின் சரும பிரச்சனைகளை அடியோடு போக்கும் ...!!

இதில் உள்ள ஈரப்பத தன்மைகள் துளைகளை கலைந்து, இறந்த தோல் செல்களை நீக்கி உச்சந்தலையில் ஈரப்பதம் நுழைய வழி செய்கிறது.

ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் குறைவான தலை பொடுகு அல்லது உலர் உச்சந்தலையில் சிக்கல்களை இருப்பதை உறுதி செய்யும்.

குறிப்பிட்ட அளவில் கற்றாழை சாறு பருகுவது சரியென்றாலும், இதனுடைய பக்கவிளைவுகள் உங்களுடைய உடலை பாதிக்காமல் இருக்க ஒரு மருத்துவரை கலந்து ஆலோசிப்பது சிறந்தது