ஊரடங்கால் உப்பள தொழில் பாதிப்பு:வேதாரண்யத்தில் மீண்டும் உப்பு தேக்கம்

உப்பள

ஊரடங்கு காரணமாக உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யத்தில் மீண்டும் உப்பு தேக்கம் ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கால் வேதாரண்யத்தில் லட்சக்கணக்கான உப்பு மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டது.

லாரிகள் செல்லாத நிலையில் இந்த தேக்கம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் அத்தியாவசிய பொருளான உப்பை எத்தனை லாரிகள் வேண்டுமானாலும் ஏற்றிச்செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

உப்பு ஏற்றுமதி பாதிப்பு

இதனையொட்டி நூற்றுக்கணக்கான லாரிகள் வேதாரண்யத்திலிருந்து உப்பை ஏற்றிச்சென்றன.

ஆனால் உப்பை ஏற்றி செல்லும் லாரிகள் தாணிக்கோட்டகத்தில் நிறுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் லாரி நிறுத்தும் இடத்தை பார்வையிட்டு வேதாரண்யத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அகஸ்தியன்பள்ளியில் இருந்து சிறு-குறு உற்பத்தியாளர்களின் உப்பை 10 லாரிகளில் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதி வழங்்கப்பட்டது. ஆனால் லாரி உரிமையாளர்கள் லாரிகளில் உப்பு ஏற்றுவதை நிறுத்திவிட்டனர். இதனால் உப்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

மீண்டும் உப்பு தேக்கம்

இதனால் கடந்த மாதம் 75 ஆயிரம் டன் உப்பு மூட்டைகள் தேக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உப்பு தேக்கம் ஏற்பட்டுள்ளது.

Also Read  உள்ளாட்சி கட்டமைப்பு எப்படி?

உப்பு ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதனால் உப்பள பகுதியில் மலை போல் உப்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தடைக்காலம் முடிந்த பின்புதான் உப்பு தேக்க நிலையிலிருந்து விடுபட்டு உப்பு ஏற்றுமதி நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.