காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்…!!

காலையில்

காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் தண்ணீரானது நம்முடைய குடலை மட்டும் சுத்தம் செய்வது இல்லை.

நம்முடைய உடம்பில் இருக்கும் எல்லா வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்றும் தன்மை இந்த தண்ணீருக்கு உண்டு

உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் நச்சுப் பொருட்கள் எல்லாம் சிறுநீரின் வழியாக முழுமையாக வெளியேறிவிடும்.

தண்ணீரை எவ்வளவு அதிகமாக பருகுகின்றோமோ, அவ்வளவு சிறுநீர் கழிவு வெளியேறும்.

அந்த சிறுநீரில் உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்கள் வெளியேறும் என்பது  குறிப்பிடத்தக்கது.

குடல்புண் என்று சொல்லப்படும் இந்த அல்சரை வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது.

காலையில் உணவு அருந்தாமல்  இருப்பவர்களுக்கு கூட, வெறும் தண்ணீர் மட்டுமாவது குடித்துக் கொள்ளுங்கள். அல்சர் வராமல் தடுக்க முடியும்.

மெட்டபாலிசம் அதிகரிக்கிறது: நாம் உண்ணும் உணவு விரைவாக ஜீரணம் ஆவதற்கு இந்த மெட்டபாலிசம் உதவியாக உள்ளது.

இதன் மூலம் நாம் உண்ணும் உணவு விரைவாக ஜீரணிக்கப்பட்டு, உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் விரைவாக உடலில் சேர்ந்து ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை ஆக்சிஜன் அதிகப்படியாக கிடைப்பதன் மூலம் நம்முடைய உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்.

உடல் எடையை குறைக்கும்: வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் உடல் எடை குறைக்கப்படுகிறது.

Also Read  மூக்கு அவ்வளவு முக்கியமா...

உடலில் இருக்கும் மெட்டபாலிசம் அதிகரிக்கப்படுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகளை அது குறைத்துவிடும்.

பொதுவாகவே குடல் சுத்தம் இல்லை என்றால் தான் முகத்தில் முகப்பரு ஏற்படும் என்பது அறிவியல் ரீதியான உண்மை.

தினம்தோறும் தண்ணீரை குடித்து உடலை சுத்தமாக வைத்திருந்தால் முகத்தில் எந்த ஒரு முகப்பருவும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

அதிகப்படியான தண்ணீர் குடிப்பதன் மூலம் நம்முடைய  தோலும் மென்மையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது: நம்முடைய உடலுக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது நோய் எதிர்ப்பு சக்தி.

இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை  ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மையும் இந்த தண்ணீருக்கு உண்டு.