பணியை விட்டு தூக்குவோம்-பஞ்சாயத்து செயலரை மிரட்டும் இயக்கம்

நீதி கேட்கும் உள்ளாட்சி சங்கம்

 சமூக அமைப்பு

மக்கள் சேவை செய்ய எண்ணற்ற அமைப்புகள் புற்றீசலாக புறப்பட்டு வருகின்றன.

நமக்கு கிடைத்த ஒரு குரல் தொகுப்பு பல விசயங்களை விளக்கியது.

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக தென்காசி மாவட்டம் நயினாகரம் பஞ்சாயத்து செயலரிடம் பேசிய குரல் பதிவு வந்தது.

பஞ்சாயத்து செயலரிடம் சட்ட நீதி இயக்க பொதுச்செயலாளர் பேசும் குரல் தொகுப்பு

மக்களுக்காக பேசுவதாக பாதுகாப்பு இயக்கம் சார்பில்  அதன் பொதுச்செயலாளர் ஊரக செயலாளரிடம் பேசுகிறார்.சில இடத்தில் மிரட்டுகிறார்.

இதுபோன்ற பல நிகழ்வுகள் நாடு முழுவதும் நடந்து வருகிறது. தவறை தட்டிக்கேட்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால்…மிரட்டல் தொணியில் பேசுவது தவறு.

இதற்கு  தமிழ்நாடு உள்ளாட்சி செயலர்கள் சங்கத்தின் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் மொதுச்செயலாளரிடம் பேசிய குரல் பதிவை வெளியிட்டு உள்ளோம்.

தங்களது அமைப்பின் உறுப்பினருக்கு பிரச்சனை என்ற உடன் பேசிய செயலை விட, தனது சங்க உறுப்பினரின் தவறை திருத்தி கொள்ளவேண்டும் என்ற ௯றிய ஜான்போஸ்கோ பிரகாஷின் நேர்மைக்கு நமது வாழ்த்துக்கள்.

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறை உற்று நோக்க வேண்டிய விசயம் இதுதான்.

Also Read  காவல்துறை தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்

இரு அமைப்பின் பிரச்சனையாக இதை பார்ப்பதை விட, ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனையாகவே பார்க்கவேண்டும்.

யாராக இருந்தாலும் மற்றவரை மிரட்டும் தொனியில் பேசுவது மிகப்பெரும் குற்றம். அதுவும் சட்ட நீதி என்று அமைப்பிற்கு பெயர் வைத்து விட்டு சட்டத்தை கையில் எடுப்பது கடும் குற்றம்.