கொரோனா நிவாரண நிதி:ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கரூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்

இன்ஸ்பெக்டர்

கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த பணிகளுக்கு நிவாரணங்களை வழங்க யாராக இருந்தாலும் தாராளமாக நிதி வழங்கலாம், பொருட்கள் வழங்கலாம் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நல் உள்ளம் படைத்தவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

தன்னார்வலர்களும் நேரடியாக நிவாரணங்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் கொரோனா நிவாரண நிதிக்காக கரூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, தனது ஒரு மாத சம்பள தொகை ரூ.80,644-க்கான காசோலையை கலெக்டர் உமா மகேஸ்வரியிடம் நேற்று வழங்கினார்.

இது குறித்து அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறுகையில், “எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி நகர் மேல முத்துக்காடு ஆகும்.

நான் திருமணம் செய்ததும் இந்த ஊர் தான். கொரோனா நிவாரண பணிகளில் என்னால் முடிந்த உதவியை சொந்த மாவட்டத்திற்கு செய்ய திட்டமிட்டேன்.

மேலும் உதவி செய்யுமாறு எனது மகன்கள் 3 பேரும் என்னை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிதி ஏழை, எளிய மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சென்றடையும்.

Also Read  கரூர் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி எது தெரியுமா?

நான் தனித்தனியாக ஒவ்வொருவரையும் தேடிப்பிடித்து உதவி செய்ய முடியாது. அதனால் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி உள்ளேன். ஏழைகள் பலருக்கு அவ்வப்போது ரூ.1,000, ரூ.2,000 வழங்கி வருகிறேன்.

செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரிடம் எனது செருப்பை தைக்க இன்று (அதாவது நேற்று) காலை சென்றேன். அவர் ரூ.10 என்னிடம் கேட்டார். அவரது ஏழ்மை நிலையை கண்டு வருத்தமடைந்தேன். அவருக்கு ரூ.50 கொடுத்துவிட்டு வந்தேன்” என்றார்.