உங்கள் ஊருக்கு உதவலாம் வாங்க..

தினமும் இணையம் படியுங்கள்

பிறந்த பூமி

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்து,வளர்ந்து பணி நிமித்தமாக உலகின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்..

சினிமா,அரசியல்,கேளிக்கை என இணையத்தளத்தை பயன்படுத்துவோர் மத்தியில் பயனுள்ள செய்திகளை தருவதற்காக துவங்கப்பட்ட இணையம் இது.

கிராம,நகர மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் உள்ள கிராம,ஒன்றிய,மாவட்ட பஞ்சாயத்து செய்திகளை வழங்குவதற்காக மட்டுமே…www.tnpanchayat.com என்ற இணையமும்.

பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி அமைப்பின் செய்திகளை மட்டுமே வழங்கும்www.tntownpanchayat.com என்ற இணையமும் துவங்கப்பட்டுள்ளது.

துவங்கிய குறுகிய காலத்திலேயே நமக்கு பல செய்திகள் பாடமாக தெரிகிறது.

பல கிராமங்களில் பராமரிக்கப்படாத ஏரிகள்,குளங்கள்…பொதுக்கழிப்பறை இல்லா நிலை…அடிப்படை வசதியில்லா அரசு பள்ளிகள்,நூலகங்கள்…வாரத்திற்கு ஒரு நாளே வரும் குடிநீர்…பல்வேறு விளையாட்டுகளில் திறமை இருந்தும் முறையான பயிற்சி இல்லா ௲ழல்….

இப்படி…நீங்கள் பிறந்த மண்ணின் நிலை உள்ளது. அனைத்துக்கும் அரசாங்கம் மட்டுமே தீர்வு ஆகாது.

உங்களால் முடிந்ததை உங்கள் ஊருக்கு செய்திட வாருங்கள்.

உங்களின் பிறந்த நாள்,கல்யாண நாள் போன்ற சுபகாரிய சுபச்செலவை உங்கள் ஊரை நோக்கி திருப்புங்கள்.

நீங்கள் படித்த பள்ளிக்கு இருக்கைகள் வழங்கலாம், நூலகங்களை டிஜிட்டல் மயமாக்கலாம், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தலாம்…

இப்படி…உங்களால் முடிந்ததை செய்திட வாருங்கள்.

உங்களுக்கும்,உங்கள் ஊருக்கும் இணைப்பு பாலமாக இந்த இணையம் என்றும் இருக்கும்.

Also Read  எழுவன்கோட்டை - சிவகங்கை மாவட்டம்

வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்

இவர்போல யாரென்று உங்கள் ஊர் சொல்லவேண்டும்

  (எங்கோ வாழ்ந்தாலும் உங்களின் உள்ளம் ஊரிலே இருக்கும்தானே….உங்கள் ஊர் செய்தியை தினமும் தெரிந்துகொள்ள www.tnpanchayat.com பாருங்கள்)

இணையத்தால் இணைவோம்… இதயத்தால் உயர்வோம்