நச்சுகளை நீக்கும் கல்லீரல்

குளுகோஸ்

படைத்தவன் மீது பாவம் இல்லை…! பகுத்தறிவு என்பதை மனித இனத்திற்கு மட்டுமே இறைவன் இலவசமாக வழங்கி உள்ளார்…!

பரிசாக கிடைத்த அந்த பகுத்தறிவு நமக்கு கற்றுதருவது…
நமது ஆரோக்கியம் நம் கையில்…!

மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு.

பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என பல காரணங்களால் ஆண்-பெண் இருபாலாரும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

சில உடல் சொல்லும் அறிகுறிகளை நாம் கவனிக்க வேண்டும்.

   அடிக்கடி உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கின்றதா?

சில சமயம் முதுகுவலி, வயிற்று வலி, கீழ் காலில் சவுகர்யமின்மை ஏற்படுகின்றதா?

   வயிற்று பிரட்டல், பசியின்மை ஏற்படுகின்றதா?

   உடல் நிறமோ, கண்ணின் வெள்ளைப் பகுதியோ மஞ்சளாக இருக்கின்றதா?

  அதிக எடை இருக்கின்றதா? அதனை குறைப்பது மிகவும் கடினமாக இருக்கின்றதா?

   கழுத்து, கை உள் மடிப்பு பகுதிகளில் அடர்ந்த கறுப்பு நிறம் இருக்கின்றதா?

   உங்கள் சருமம் ஆரோக்கியமற்று இருக்கின்றதா?

  வயிற்று வலி, பிடிப்பு போன்றவை ஏற்படுகின்றதா?

   தலைவலி, குழப்பம், கவனக்குறைவு ஏற்படுகின்றதா?

  எப்போதும் பசி, அதன் காரணமாக அதிகம் சர்க்கரை, கார்போஹைடிரேட் உணவு உண்ணுதல் போன்ற பாதிப்புகள் உள்ளதா?

  என்னவென்றே தெரியாத உடல்நலமின்மை உள்ளதா?

இவைகளில் அனைத்துமோ, சிலவோ இருக்குமானால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இது கொழுப்பு நிறைந்த கல்லீரலின் பாதிப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு.

Also Read  முடக்கத்தான் கீரை தரும் பயன்கள்

இதற்கு உடனடியாக முறையான கவனம் கொடுக்கவில்லை என்றால் கல்லீரலில் அதிக பாதிப்பு, இருதய பாதிப்பு, பக்க வாதம், சர்க்கரை நோய், புற்று நோய் என பல கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.

இன்று குறைந்தது 500-க்கும் மேற்பட்ட வேலைகளை கல்லீரல் செய்கின்றது.

   உடலில் நச்சுக்களை நீக்குகின்றது.

   குளுகோசினை சேமித்து தேவைப்படும் போது சக்தியாக வெளியிடுகிறது.

ரத்தத்தில் கிருமிகளை நீக்குகின்றது.

    ரத்தத்தில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகின்றது. இப்படி விவரித்துக் கொண்டே போகலாம்.

   இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் கொழுப்பு சேர்ந்த கல்லீரலாக மாறும் போது அது வீக்கம் பெறுகின்றது.

பெரிதாகின்றது. அதனுடைய வேலைகளை முறையாக செய்ய முடியாமல் போகின்றது.

   அதிக எடை ஆகியவை கொழுப்பு கல்லீரலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.

  கல்லீரலில் 10 சதவீதம் சரியாக வேலை செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

கல்லீரலை ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி?

   நோயினை எதிர்ப்பது என்பது நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது ஆகும்.

      அளவான எடை இருக்குமாறு நம்மை காக்க வேண்டும். அதிக எடையினை குறைப்பது கல்லீரலில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவும்.

    விகிதாச்சார உணவு அவசியம். அதிக கலோரி சத்து உள்ள உணவு, அதிக கொழுப்பு, மைதா வகைகள், அதிக பாலிஷ் செய்த அரிசி, சர்க்கரை இவற்றினைத் தவிருங்கள்.

நார் சத்து மிகுந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், கொட்டைகள், விதைகள் இவைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Also Read  சர்க்கரை வேம்பு-இனிக்கும் வேப்பிலை

  அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் கல்லீரல் கொழுப்பினை குறைக்கும்.

மது, புகை, புகையிலை போன்ற நச்சுப் பொருட்களை அடியோடு தவிர்ப்போம்.

உங்கள் சுகாதாரப் பொருட்களை மற்றவர்களுடன் பங்கு போட வேண்டாம்.

கல்லீரலுக்கான ஏ, பி. வைரஸ் தவிர்க்க நடைபயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.

மது அருந்துபவர்கள், அருந்தாதவர்கள் இருவரும் கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோய்க்கு தீர்வாக மேலும் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

அளவான முறையில் காபி அருந்தலாம். காபியில் உள்ள கேபின் கல்லீரலில் ஏற்படும் முறையற்ற என்ஸைம்கள் அளவினை சரி செய்யும்.

கீரைகள், பச்சை காய்கறிகள் பெரிதும் உதவும்.

டோஃபு எனப்படும் சோயா பன்னீரினை அளவாய் பயன்படுத்தவும்.

மீன், ஒமேகா -3 இவை கல்லீரல் வீக்கம், கொழுப்பு இரண்டினையும் வெகுவாய் குறைக்கும்.

ஒட்ஸ் உணவினை காலை உணவாக உட்கொள்ளலாம்.

வால் நட்ஸ் எனப்படும் பாதாம்பருப்பு தினமும் 3-4 எடுத்துக்கொள்ளலாம்.

கொழுப்பு குறைந்த பால் உபயோகிக்கலாம்.

ஆலிவ் எண்ணெயினை சமையலில் பழக்கிக் கொள்ளுங்கள்.

பூண்டினை அன்றாட உணவில் அவசியம் சேர்க்க வேண்டும்.

கிரீன் டீ ஒரு வேளையாவது பருகுங்கள்.

பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் எப்போதும் சுறுசுறுப்பாய் இருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்த படியே இருக்காதீர்கள். தினமும் 20 நிமிட உடற்பயிற்சி செய்யுங்கள்.

கொழுப்பினை உணவில் வெகுவாய் குறையுங்கள்.

சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வையுங்கள்.

மேலும் ஆல்கஹால், வறுத்த, பொரித்த உணவுகள், அதிக உப்பு, அதிக அசைவம் இவற்றினைத் தவிருங்கள்