வீட்டு மருந்து
கற்பூரவள்ளி மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது .
சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.
இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக் காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து .
பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் .
காச இருமல் கதித்தம சூரியயையம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு
(அகத்தியர் குணபாடம்)
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.
தாவர பெயர் Coleus Aromaticus.
வேறு பெயர் ஓம வள்ளி
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.
இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.
மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.
இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.
கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும்.
இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட, கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்