நன்மைகள்
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் பாணம் (நன்னாரி சர்பத்) செய்ய பயன்படுகிறது..
நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).
நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு மற்றும் தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படுகிறது.
உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய்,
பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும்.
பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு,
மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.
நீண்ட நாள் சாப்பிட நரையை மாற்றும் தன்மையுடையது.
பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய்,
சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி, சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.
வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம்.
தொல்நோய்கள், செரியாமை, பித்த குன்மம் தீரும். ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இளஞ்சூடாக அருந்தி வரவேண்டும்.
வியர்வை நாற்றம் நீங்க மிளகு, உப்பு, புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய் சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறுநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.
நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
வேர் சூரணம் அரை கிராம் காலை மாலை வெண்ணையில் எடுத்துகொண்டால் ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் உட்கொண்டால் காமாலை தீரும்.