தலைவர் பதவி அதிகாரம் அல்ல..மக்கள் சேவை- உரக்க சொல்லும் பேராசிரியர்

எஸ் இராமசந்திரபும்

நமது இணையத்தின் சார்பாக தொடர்ச்சியாக கவனித்து வரும் ஊராட்சிகளில் இதுவும் ஒன்று.

இந்திய ஜனநாயகத்தில் கையெழுத்திட்டு பண பரிவர்தனை செய்யும் ஒரே பதவி ஊராட்சி தலைவர். பிரதமர்,முதல்வர்களுக்கு கூட இல்லாத அதிகாரம்.

அப்படிப்பட்ட பதவிக்கு வந்தவர் அதிகார பீடத்தில் அமர்ந்து, கட்டளையிடும் நிலையை விடுத்து தானே இறங்கி குப்பை அள்ளும் ஆறுமுகம் பாராட்டுக்குரியவர்.

இந்தியாவிற்கே முன்மாதிரி ஊராட்சியாய் உயர்த்திகாட்டிட உழைக்கும் பேராசிரியர் ஆறுமுகத்திற்கு நமது இணையத்தின் சார்பாக மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

வேண்டுகோள்

இந்த செய்தியை படிக்கும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் வேண்டுகோள்.

ஊராட்சி தலைவர் பதவிக்கு கட்சி அடையாளம் இன்றி,சின்னம் இன்றி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளீர்கள்.

உங்களுக்கு அனைத்து கட்சியிலும் இருக்கும் பொதுமக்கள் வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளனர்.

ஆகவே…நீங்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். ஊராட்சி மன்ற பலகையில் கட்சி கலரில் தங்கள் பெயரை எழுதாதீர்கள்.

நீங்கள் உங்களின் கட்சி சிந்தனையை கழட்டி வைத்து விட்டுத்தான் ஊராட்சி தலைவர் இருக்கையில் அமரவேண்டும்.

இந்த வேண்டுகோள் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும்.

Also Read  காசிமேஜர்புரம் ஊராட்சி