சின்னவாடி பஞ்சாயத்தை சிறப்பானதாக மாற்றுவோம்

தலைவர் செந்தில்குமார் சபதம்

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவாடி ஊராட்சியின் தலைவராக செ.செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நமது வாழ்த்தை சொல்லிவிட்டு உரையாடினோம்.

அவர் நம்மிடம் ௯றியதாவது…

எங்கள் பஞ்சாயத்தில் இராமலிங்கபுரம்,தாதபட்டி,சின்னவாடி என மூன்று ஊர்கள் உள்ளது.

இங்கு தண்ணீர் பிரச்சனையே தலைவிரித்தாடுகிறது. புதிதாக ஆள்துணை கிணறுகள் ஏற்படுத்தி உடனடியாக தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதே முதல் பணி.

இராமலிங்கபுரத்தில் வாறுகால் கட்டுவது,பேவர்பிளாக் சாலை அமைப்பது மிக முக்கியமான பணி.

முதல்முறையாக பதவிக்கு வந்த எனக்கு,துணைததலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் முழு ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் ஐந்தாண்டுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார் செந்தில்குமார்.

உங்கள் மக்கள் பணியில் எங்கள் இணையமும் இணைந்து செயல்படும் என்று மீண்டும் வாழ்த்து ௯றி விடைபெற்றோம்.

Also Read  உதாரணமாகும் ஓர் ஊராட்சி-மக்கள் சேவையில் முனைவர்