வாழப்பாடி சோமம்பட்டியில் வழிகாட்டிய மகளிர் குழு

சேலம் மாவட்டம்

வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ள சோமம்பட்டி ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர், உள்ளாட்சி பணியாளர்களுக்கு உள்ளம் உகந்த உதவி செய்திருக்கிறார்கள்.

இக்கட்டான இந்த காலகட்டத்தில் ஊராட்சி அமைப்போடு இணைந்து அவர்கள் செய்திருக்கும் செயல், மற்ற ஊராட்சிக்கும் ஓர் எடுத்துக்காட்டு.அவர்களின் பணிக்கு நமது இணயக் குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்.

சோமம்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைகாவலர்கள் துப்புறவு பணியாளர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆகியோர்களுக்கு சோமம்பட்டி மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண பொருட்கள் அரிசி பருப்பு எண்ணை சோப்பு பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டது.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் A.பாலசுப்ரமணியன், துணைதலைவர் A.கதிரேசன், ஊராட்சி செயலாளர் K.மகேஸ்வரன் மற்றும் VPRC கணக்காளர் வெங்கடேஷ்வரி, மகளிர் சங்க நிர்வாகி ராணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Also Read  ரத்தினகிரி ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்